பக்கம்:புதிய திரிபுரங்கள்.pdf/113

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கேள்வித் தீ 107 மாரியம்மாள் விக்கிக்கொண்டே 'நான் பறமுண்ட யாம், ஆளவச்சி தூக்கிட்டுப் போகச் சொல்லுவானாம்' என்று சொன்னபோது, எல்லோரும் சப்த நாடிகளும் அடங்கி, அடங்கியவை ஆக்ரோஷமாக எழுந்ததுபோல் மானேஜர் அறையைப் பார்த்தார்கள். தங்கப்பாண் டி. சாவகாசமாக வெளியே போய்க் கொண்டிருந்தார். தையல் ஆசிரியன், தோல் பையைத் தூக்கிக்கொண்டு, அவர் பின்னால் ஒடிக் கொண்டிருந்தான். மாரியம்மாள், கண்ணிரைத் துடைத்துக்கொண் டாள், சோகத்தால் கீறப்பட்ட முகத்தோடு, 'நான் போறேன்' என்று சொல்லிக் கொண்டு, நான்கடி நட, ந்து விட்டு மீண்டும் திரும்பி வந்து, சரஸ்வதியின் கழுததைக் கட்டிக்கொண்டு, மீண்டும் கேவிக்கேவி அழுதாள். 'எனக்குப் பயமா இருக்கு. வழில...அவன் சொன்னது மாதிரி...சொன்னது மாதிரி...' என்று சொல்லிவிட்டு, எல்லோரையும் அவள் பரிதாபமாகப் பார்த்தாள். உடம்பின் எங்கோ ஓரிடத்தில் முளைத்திருந்த வீரம், சரஸ்வதியின் வாய்க்கும் கண்களுக்கும் தாவியது: "நீ கவலப்படாத மாரி. எந்தப் பய வரான்னு பார்த்துப் புடுவோம். மொதல்ல என் வீட்டுக்கு வா. சாயங்காலமா எங்கப்பா மரம் வெட்டிட்டு வருவாரு. அவர...ஒன்ளை ஒன் வீட்லயே கொண்டுவிடச் சொல்றேன். வழில... எவனாவது வந்தாமுன்னா, கோடாரியாலயே விறகக் கீறுறது மாதிரி கீறிப்பிடுவாரு. வா...எங்க வீட்டுக்குப் போகலாம்...' சரஸ்வதி, மாரியை தோளோடு சேர்த்து அனைத்துக் கொண்டாள். இந்திராவும் தங்கப்பாண்டியின் ஆசிரிய மச்சான்' கோவிந்தனும், இன்னும் ஒரு ஆசிரியரும், பல்லைக் கடித்துக் கொண்டார்கள். சீனிவாசன், முக்கியப் பிரச்சினைபற்றிக் கேட் டார். 'நேற்றே கையில காசு இல்லன்னு சொன்னியே? பஸ்ஸுக்கு காசு வச்சிருக்கியா?”