பக்கம்:புதிய திரிபுரங்கள்.pdf/114

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

108 சு. சமுத்திரம் மாரியம்மாள் வெறுமையோடு பார்த்தாள். தன் மானத்திற்கும், பிரத்யட்ச நிலைக்குமிடையே தவித்துக் கொண்டு அவரைப் பரிதாபமாகப் பார்த்தாள். உடனே, பெரும்பாலான ஆசிரியர்கள் தங்களிடம் இருந்த எட்ட ணா, ஒரு ரூபாய் சொத்துக்களைப் பிரித்தார்கள். ஏழரை ரூபாய் தேறியது மாரியம்மாள், கூனிக் குறுகக் கூடாது என்பதற்காக, சீனிவாசன், வசூலித்த பணத்தை சரஸ்வதியிடம் கொடுத்தார். சரஸ்வதியின் அணைப்போடு போறேன், போறேன். ஒங்கள இனிமேல் எந்தக் கா லத் து ல பார்க்கப் போறேனோ என்று அழுதழுது சொல்லிவிட்டு, மாரியம்மாள் விம்மினாள். சீனிவாசன் கண்களைத் துடைத்துக் கொண்டார். தலைமை ஆசிரியர் தங்கச்சாமி, காரைக் கட்டிடத்தின் வாசலில் நின்றுகொண்டே, அழப்போவதுபோல் பார்த்தார். கனகம் ஒடிப்போய், மாரியின் கழுத்தைக் கட்டிக்கொண்டே விம்மினாள். இந்திராவிற்குக்கூட கண் கலங்கியது. கண் கலங்கி நின்ற வேலாயுதம், போகப் போகிறவளை, கண்களால் வழி மறிப்பதுபோல் பார்த்தான். அந்தக் கட்டிடமே அவனுக்குச் சமாதியாகத் தெரிந்தது. 'மாரி நீயாவது உயிரோ. போற. இனிமேல் நான்...இங்கே...உயிரில் லாமல் தான் இருப்பேன் மாரி...' மனதில் லேசாக வந்துபார்க்கும் வேலாயுதத்தை, மாரியம்மாளும் தனிப்படுத்தி’ப் பார்த்தாள். தங்கப் பாண்டியின் பேச்சால், இதுவரை, தனக்கும் ஒரு நேசன் இருந்தான் என்பதை தற்காலிகமாக மறந்துபோன பெண், அவனை நினைவுபடுத்திக்கொண்டு பார்த்தாள். ஏதோ ஒன்றை-விடக்கூடாத ஒன்றை-அங்கேவிட்டு விட்டுப் போவதுபோல் துடித்தாள். இருப்பது வரைக்கும் பெரிதாகத் தெரியாத ஒன்று இழக்கப்படும்போது, அவளை இழுத்துப் பிடித்தது. கண்களை கைகளால் மூடிக்கொள்ளச் செய்தது.