பக்கம்:புதிய திரிபுரங்கள்.pdf/115

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5 பள்ளிக்கூடம் மாறிவிட்டதா அல்லது, தான் மாறி விட்டோமா என்று யோசித்துக் கொண்டே, சரஸ்வதி, மறுநாள் பள்ளிக்கூடத்திற்குள் நுழைந்தாள். ஆசிரியஆசிரியைகள், கும்பல் கும்பலாக நின்று பேசிக்கொண்டு நின்றார்கள். இன்னும் 'பிரேயர்' மணி அடிக்கவில்லை. மாரியம்மாளின் ஆறாவது வகுப்பு மாணவ-மாணவிகள் எதையோ பறிகொடுத்தவர்கள் மாதிரி பேந்தப் பேந்த விழித்துக் கொண்டிருந்தார்கள். ஒரு சிறுமி, சரஸ்வதி யிடம் வந்து டீச்சர்...எங்க டீச்சர் இனிமேல் வரவே மாட்டாங்களா என்று சொன்னபோது, சரஸ்வதிக்கு கண்கள் நிறைந்தன. இழப்பின் ஆற்றாமையில் அல்லாடிக் கொண்டிருந்தவள், சீனிவாசன் ஆசிரியரிடம் எதையோ விவாதித்துக் கொண்டு நிற்கும் இளைஞனைப் பார்த் தாள். அவள் மனம் மறக்க நினைத்தாலும், மறக்க முடியாத சண்முகம், எல்லோருடைய ஆடைகளையும் மறைக்கும்படியும், மறக்கும்படியுமான பளிச்சென்ற’ ஆடையில் தோன்றினான். 'அப்பாடா பார்த்து எவ்வளவு நாளாச்சு...ரொம்ப ஸ்டைலாதான் இருக்கார். கிராப்பக் கூட மாத்திக்கிட்டார் போலுக்கு. மதுரையில வைகை ஆறு, ஆசாமிய தளதளன்னு மாத்திட்டு.' சரஸ்வதி, பத்தடி இடைவெளியை, மூன்றே எட்டில் முடித்துவிட்டு, சீனிவாசன் அருகே போய் நின்றாள். அவனைப் பார்க்காதது மாதிரியான 'பாவலா கண்க ளுடன், அவன் வருகை தன்னை ஒன்றும் பாதிக்கவில்லை என்பதுபோல நின்றாள். அவரே பேசட்டுமே..."