பக்கம்:புதிய திரிபுரங்கள்.pdf/117

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கேள்வித் தீ i i I சரஸ்வதியால் பேசாமல் இருக்க முடியவில்லை. மனதுள் பயமாகத் தோன்றிய சந்தேகத்தை, வாய்விட்டே கேட்டாள். 'மாரியம்மாளுக்கு ஆறுதல் சொன்னிங்களா? எங்கப்பாவை போகச் சொல்லிட்டு, நீங்க அவளை ஊர்ல கொண்டு விட்டுவிடுறதாய் சொன்னீங்களாம்.' "ஆமாம்...நான்தான் வீட் ல கொண்டுவிட்டேன். அவங்க குடும்ப நிலைமை ரொம்ப மோசமாக இருக்கு, இந்தப் பொண்ணு வேலைக்கு வந்த பிறகுதான், அந்த வீட் ல ராத்திரி தீ மூட்டி இருக்காங்க.’’ "மாரியோட பtrவம் மானேஜரை சும்மா விடாது. ’’ 'பாவ புண்ணியத்தைப் பேசிப் பேசியே நாம் அழிஞ்சி போயிட்டோம். பாவம்... அது பாட்டுக்கு பாவம் கிடக்கட்டும். நாம ஏதாவது செய்யனும்...' 'மதுரை டிரெயினிங் ஒங்கள ரொம்பத்தான் மாத்தி யிருக்கு 5 p. 'உண்மைதான். டிரெயினிங்குன்னு பார்த்தா, அது சரியான குப்பை, ஆனால், அங்க பல்வேறு வகையான ஆசிரியர்களை பார்க்க முடிஞ்சுது. நம்ப மானேஜ்மெண்ட் சங்கதியக் கேட்டுட்டு, நம்பளத்தான் குற்றம் சொல் றாங்க. பல இடங்கள்ல இநத மாதிரி அக்கிரமங்கள் நடந்ததை எதிர்த்து, ஆசிரியர்கள் போராடி ஜெயிச்சு கிட்டு வாராங்களாம். ஆசிரியர்களை எம்ப்ளாய்மெண் ட் ஆபீஸ் மூலந்தான் நியமிக்கணுமுன்னு சட்டம் வந்ததே, ஆாம்பப்பள்ளி ஆசிரியர்களோட போராட்டத்தாலத் தான். பெடரேஷன் செகரட்டரியப் பார்த்தேன். நடக்கிற அநியாயத்தெல்லாம் சொன்னேன். எல்லாத் தையும் பொறுமையாக் கேட்டுட்டு, கடை சில ஒங்களத் தாய்யா மொதல்ல உதைக்கணு"முன்னார். சம்பளத்துல கமிஷன் கொடுக்கதுக்கு வெட்கப்படாண்டாமான்னு கேட்டார். 'மதிய உணவு பொய்க்கணக்கு எழுதறது