பக்கம்:புதிய திரிபுரங்கள்.pdf/12

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6 சு. சமுத்திரம் தார். ஏற்கெனவே டேப் ரிக்கார்டர் இயங்கும் விதத்தை சென்னையிலேயே தெரிந்து வைத்திருந்த சாமியார், அதைக் கொடுத்தவரை, இயக்கச்சொல்லி, நன்றாகத் தெரிந்துகொண்டார். கோவிலுக்குள் இருக்கும்பே தும், குடிசைக்குள் முடங்கும்போதும், சதா இந்தப் பாடல் களைப் போட்டுக் கொண்டிருந்தார். இதனால், இதர நாமாவளிப் பாடல்களையும் ஸ்லோகங்களையும் கூட அவர் மரபுப்படி முணங்கவில்லை. அதற்காக வருத்தப் படவும் இல்லை. அல்லும் பகலும், இந்தப் பாடல்களைப் போட்டுப் போட்டுக் கேட்பதில், டேப்புக்கள் மட்டுமல்ல, டேப் ரிக்கார்டர் கூட தேய்ந்துவிட்டது. இன்றும் அவை ஒலிக்கும் நிலையிலேயே இருந்தாலும், சாமியாருக்கு அவை தேவைப்படவில்லை. இப்போது அவர் காதுகளுக்குள்ளும் நெஞ்சுக்கள்ளும் இந்தப பாடல்கள், நினைத்த போதெல்லாம் முன்பு கேட்டதைவிட, நன்றாகத் தெளிவாக ஒலிக்கின்றன. குறிப்பாக கோவிலுக்குள் வந்து பத்மாசனம் போட்ட உடனேயே யாரோ அருகில் இருந்து பாடுவதுபோல், அவர் காதுகளில் ஒலிக்கும். சாமியார்கூட, சில சமயம் நம்பாதவர்போல் சுற்றும் முற்றும் பார்ப்பார். டேப்பில் வாங்கிய பாடல்களை நெஞ்சம் வேண்டும் போதெல்லாம் எதிரொலிக்கத் துவங்கியது. அதுவும் அசலைவிட நகல் சிறப்பாக இருந்தது. யோசித்துப் பார்த்தால், எது அசல், எது நகல் என்பதில் கூட அவருக்கு சந்தேகம் வந்தது. இந்த அசல்-நகல் ஆராய்ச்சியே, மனிதன், கடவுளை தன்னைப்போல் நகலெடுத்தானா அல்லது கடவுள் தன் நகலை மனித உருவில் படைத்தானா என்ற வேதாந்த தத்துவத்திற்குள இறக்கியது. 'அழியாதது எதுவோ அதுவே அசல். ஆனால் ஒருவன் இறக்கிறான். அவனின் புகைப்படமே நிலைக்கிறது. இப்படி அசல் அழிவதும் நகல் நிலைப்பதுமாக இருந்தால், இந்த அசல் நகலுக்கு அப்பால் அழியாத ஒன்று இருக்க வேண்டும். அது தான்