பக்கம்:புதிய திரிபுரங்கள்.pdf/121

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கேள்வித் தீ 115 எதிர்பார்த்துக்கிட்டு இருக்காங்க...இந்த லட்சணத்துல நான் வேற லோன் போடப் போனேன்' என்றாள் சம்பந்தப்பட்ட ஆசிரியர்கள் பதறினார்கள். சண்முகம், சிரித்துக் கொண்டான். அவன் சிரித்ததால், தன்னையறியாமலே தானும் சிரித்த சரஸ்வதி 'ஏன் ஸார், அவங்க சொல்றது ஒங்களுக்கு சிரிப்பா இருக்கா?’’ என்றாள் சண்முகம் மேலும் சிரித்துக்கொண்டே விளக்கினான்: 'நம்ம அடிப்படைச் சம்பளத்துல ஆறு சதவிகிதத்தை மானேஜ்மெண்ட் பிடிச்சு, போஸ்ட் ஆபிஸ்ல போடணும். இதற்கான பாஸ் புக் சட்டப்படி நம்மகிட்ட இருக்கணும். இங்க நடக்கது என்ன? ரெண்டு வருஷமா நம்ம மானேஜர் நம்ம சம்பளத்துல பிடிச்சி, பணத்த போஸ்ட் ஆபீஸ்ல போடல. அதனால விண்ணப் பங்கள அனுப்பல.'" 'இந்த அநியாயத்த கேக்கவே முடியாதா?’’ 'ஏன் முடியாது? அதுக்கு, ஆரம்பந்தான் நாம சங்கத்துல சேருறது. அதோட நாம படுற கஷ்டத்த ஊர்க்காரங்ககிட்ட சொல்லணும். பொதுமக்களை ஈடுபடுத்தாத எந்தப் போராட்டமும் ஜெயிக்காது.' 'ஊருக்காரங்களா? சரியான தின் னிமாடங்கப்பா!' "அப்படிச் சொல்லாதீங்க ஸார். ஜவகர்லால் நேரு, இந்தியாவைப்பற்றி சொன்னது ஞாபகம் இருக்கா? இந்தியா யானை. அது படுத்துக் கிடந்தால் பரமசாது. எழுந்துட்டா எதிரே எதுவும் நிற்க முடியாதுன்னார். இது ஏழைகளுக்குப் பொருந்தும். அவங்கள நாம் எழுப்பி விட்டுட்டோ முன்னால், அப்புறம் நம்மாலகூட உட்கார வைக்க முடியாது." சரஸ்வதி, சண்முகத்தை ஒயிலாகப் பார்த்துக் கொண்டு நீங்க சொன்னதும் சரிதான் சார். நேற்று மாரியோடு சேரிக்குப் போனேன். அந்த ஜனங்களுக்கும்