பக்கம்:புதிய திரிபுரங்கள்.pdf/123

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கேள்வித் தி 117 எப்பவாவது அவரை வகுப்புக்குப் போகச் சொல்லி இருக்கீங்களா? கந்தசாமிக் கிழவரோட மெட்ராஸ் போயிருக்காராம். வர ஒரு வாரம் ஆகுமாம். தேதி போடாத ஒரு நாள் விடுப்பு லட்டர எழுதி, ஒங்கட்ட கொடுத்துட்டுப் போயிருப்பாரு. ஒங்களால ஆக்ஷன் எடுக்க முடியுமா? சரி. வந்து நீங்களும் இந்த பாரத்துல கையெழுத்துப் போடுங்க." தங்கச்சாமி, சண்முகத்தை ஒரு மாதிரியாகப் பார்த்துக் கொண்டே, காரைக் கட்டிடத்திற்குள் ஓடிவிட்டார். நடப்பதையும், பேசப்படுவதையும், 'இடுக்கில் நின்று ஒட்டுக் கேட்டுக்கொண்டிருந்த இந்திரா, அந்தப் பக்க மாக வந்தபோது, ஆசிரியை கனகம், "நீயும் சங்கத்துல உறுப்பினராச் சேரும்மா’’ என்றாள். ‘'எதுக்கும் "அவரு'கிட்ட ஒரு வார்த்தை கேட்டுக் கிறேன்' என்றாள் இந்திரா. 'ஒன் புருஷன்கிட்டயா' என்று தெரியாதது மாதிரி கனகம் கேட்டதும், இந்திரா தெரிந்தவள் மாதிரி, காரைக் கட்டிடத்திற்குள் ஒடிவிட்ட ாள். சம வயதில் உள்ள சண்முகத்தைப் பார்க்கும்போது, கொஞ்சம் காம்ப் ளெக்ஸ்ாகும் வேலாயுதம், இப்போது அவன் தலைமையை ஏற்றுக் கொண்டதுபோல் பாரத்தை வாங்கிக் கொண் i- s1 & . பள்ளிப் பிரச்னைகள், தமிழ்த் தாயையும் சற்று காக்க வைத்துவிட்டன. பிரேயர் மணி சற்று தாமதமாக அடிக்கப்பட்டது உண்மைதான். இண்டர்வெல் சமயத்தில், மானேஜர் மனைவி ராசம்மா, அங்கே வந்தாள். மானேஜர் ஊரில் இல்லாத போது, ராஜ்ய பரிபாலனம் செய்வதற்கு, அவள் வருவ துண்டு. அதோடு, இந்திராவிடம் நான் எப்பவோ என்