பக்கம்:புதிய திரிபுரங்கள்.pdf/124

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

118 சு. சமுத்திரம் புருஷன தண்ணி தெளிச்சி விட்டது உண்மைதான் ஒனக்கும், அவருக்கும் ஆயிரம் இருக்கதும் உண்மைதான் ஆனாலும் நான்தாண்டி பட்டத்தரசி' என்று ஒரு வருடத்திற்கு முன்பு, அவளைப் பள்ளிக்கூடத்திலேயே பலர்முன்னிலையில் சொன்னவள், இப்போது சொன்னதை சொல்லாமல் சொல்லவும், தங்கப்பாண்டி இல்லாத சமயத்தில் அடிக்கடி வருவாள். அவளைப் பார்த்ததும், மாராப்புச் சேலைகளை சீராக்கிக் கொண்டு வகுப்புகளைப் பார்த்து நகரும் எழுத்தறிவிப்போர், இ. ப் பே ா து கண் எடுக்காமல் நிற்பதில், அவளுக்கு ஆங்காரம் அதிகமாகியது. மாரி விலகாரம் அவர்களை மாற்றிவிட்டது. சண்முகம் பேசியது. அவர்கள் கோபத்தை சராசரிக்கு மேலே கொண்டு போய்விட்டது. ராசம்மா கத்தினாள். "பிள்ளிய கத்துதுல்ல! போய்ப் பாடம் நடத்துனா என்ன?' என்றாள். எல்லோரும், அவள் அருகே இல்லாதது மாதிரி தங்கள் பாட்டுக்குப் பேசிக் கொண்டிருந்தார்கள். ஆங்காரம் ஆத்திரமாக, ராசம்மா 'நெல்லு காயப் போடணும். அந்த வகுப்ப காலி பண்ணிக் கொடுங்க. வெளில மழை வரப்போகுது' என்றாள் உள்ளே தோன்றிய இடியை அறியாதவளாய். சண்முகம் சிரித்துக்கொண்டே பதிலளித்தான். இது நெல்லுக்கான இடமில்ல, கல்விக்கான இடம்,' ராசம்மா, அதிர்ந்து போனாள். "தெருவில் பார்க்கும் போதெல்லாம், 'அத்தை' என்ற வார்த்தைக்கு அடுத்த வார்த்த சொல்லாத இந்தப் பையன் என்ன பேச்சு பேசிட் டான்! இந்த சரஸ்வதிகூட குறுஞ்சிரிப்பா சிரிக்கா பாரேன். அவள் சிரிக்கணுமுன்னு இவன் சொல்லியிருக் கான். இவன் இன்னும் சொல்லணுமுன்னு அவள்