பக்கம்:புதிய திரிபுரங்கள்.pdf/125

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கேள்வித் தீ 119 சிரிக்காள். வந்தட்டிப்பய மவளுக்குச் சிரிப்பப் பாரு இரப்பாளி பய மவளுக்கு வந்த வாழ்வப் பாரு. முள்ள முள் ளால எடுத்துக் காட்டுறேன் பாருடி!" ராசம்மா, கோபத்தை அடக்கிக் கொண்டு குத்தலாகக் கேட்டாள். 'ஏய் சரசு, நேற்று ஆள் அனுப்பியும் ஏண்டி தண்ணி எடுக்க வரல? தொட்டி காலியாக் கிடக்கு. இன்னைக்கு சீக்கிரமா வந்துடு. கொஞ்சம் பாத்திரத்தை யும் தேய்க்க வேண்டிய திருக்கு! என்ன சொல்லுதது காதுல விழுதா பழையத மறந்துடா தடி. பத்தாவது வயசில இருந்தே என் வீட்டில தண்ணி எடுத்தத மறந்துட.ாதடி .' சரஸ்வதி, சண்முகத்தைப் பரிதாபமாகப் பார்த்தாள். அவன் ‘யாமிருக்கப் பயமேன்' என்பது மாதிரி சிரித்தான். அவ்வளவுதான், எங்கிருந்துதான் அப்படிக் குரல் வந்ததோ, சரியாகக் காது கேளாத தலைமை ஆசிரியரே வெளியே வரும்படிக் கத்தினாள். '"நான் பத்து வயசில தண்ணி எடுத்ததையும் மறக்கல. அப்படி எடுத்தத கேவல மாயும் நினைக்கல. ஒங்கள ஒரு சமயம் கேவலமான நிலையில கையுங் களவுமாகப் பார்த்ததையும் மறக்கல. போறியளா, இன்னும் விவரமா சொல்லணுமா?’’ ராசம்மாவுக்கு முகம் வெளுத்தது. நாக்கு உள் நோக்கிப் போனது. நானே அந்த லிங்கராஜாவ மறந் துட்டேன். இந்த பாவி மொட்ட அத மறக்கலே பாரேன். ராசம்மா, சிறிதுநேரம் பெருவிரலால் தலையில் வட்டம் போடுவதுபோல் சுற்றினாள். நடந்ததை நம்ப முடியவில்லை. நாகப்பாம்பாக வந்தவள் பெட்டிப் பாம்பாக போய்க்கொண்டிருந்தாள். அவள் போவதை, * இடுக்கில் நின்று பார்த்த இந்திராவுக்கு இதமாக"