பக்கம்:புதிய திரிபுரங்கள்.pdf/131

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கேள்வித் தீ 125 போல் முகஞ் சுருங்கி, உடம்பு ஒடுங்கியிருந்த மூக்குக் கண்ணாடி-டெப்டி இன்ஸ்பெக்டர், வகுப்பு வகுப்பாக, மாணவர் வருகைப் பதிவேட்டைப் பார்த்தார். ஒவ்வொரு வகுப்பிலும் ஏதேதோ கேள்விகள் கேட்டார். மாணவர்கள் அவற்றிற்குத் தயாராக வைத்திருந்த பதில் களைச் சொன்னபோது அவர் தங்கப்பாண்டியிடம் பேசிக் கொண்டிருந்தார். 'இடுக்கில் இப்போது தயாராகும் மதிய உணவைப் பார்வையிட்டுவிட்டு, மானேஜரும், டெபுடியும் ஆறாவது வகுப்பிற்குள் வந்தார்கள். சரஸ்வதி, நாற்காலியில் இருந்து எழுந்து கை கூப்பினாள். அதற்குப் பதிலாக ஒரு கையை லேசாகத் துரக்கிய டெபுடி இன்ஸ்பெக்டர், அவளை, 'கலாபூர்வமாக'ப் பார்த்தார். மற்ற வகுப்பு களில் நின்றுகொண்டே பார்வையிட்டவர், சரஸ்வதியின் நாற்காலியில் உட்கார்ந்தார். எழுந்திருக்கப் போகாதவர் போல் அழுத்தமாக உட்கார்ந்தார். அவளை இம்ப்ரஸ்' செய்ய வேண்டும்போல் அவருக்குத் தோன்றியது. அதட் டலாகக் கேட்டார்: 'சரி... மதிய உணவுப் பதிவேட்டையும், எல்லா வகுப்பு வருகைப் பதிவேடுகளையும், இருப்புப் பதிவேட் டையும் இங்கேயே கொண்டு வாங்க...செக் பண்ணனும் ' அந்தப் பக்கமாக வந்த தலைமை ஆசிரியர் தங்கச்சாமி, திடீரென்று மாயமாக மறைந்து, ஐந்து நிமிடத்தில் சம்பந்தப்பட்ட பதிவேடுகளோடு வந்தார். பிறகு அவற்றை டெப்டியிடம் குனிந்து கொடுத்தார். மதிய உணவுப் பதிவேட்டைப் பார்வையிட்ட டெப்டி, "என்ன இது? ஒரு வ ரமா மதிய உணவு போடலியா?" என்றார் அதடடலாக. பிறகு 'என்ன... ஹெச். எம். ஒங்களத தான்... ஏன் ஒரு வாரமா சோறு போடல?' என்றார் கோபமாக.