பக்கம்:புதிய திரிபுரங்கள்.pdf/132

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

126 சு. சமுத்திரம் தங்கசாமி சரஸ்வதி நீதானம்மா கணக்கு எழுதற! சொலலும்மா' என்றார். அவள் தயக்கமில்லாமல் 'சோறு போடல, அதனால எழுதல' என்றாள். தங்கப் பாண்டி, அனிச்சையாக அடிக்கத் தூக்கிய கையை, கீழே போட்டுக்கொண்டார். டெப்டி-இன் ஸ்பெக்டர், அங்கே இருந்தவர்களை ஒரக்கண்ணால் பார்த்துக்கொண்டே, மதிய உணவுப் பதிவேட்டையும், மாணவர்களை வகுப்புக்களில் கனக் கெடுக்கும் வருகைப் பதிவேடுகளையும் ஒப்பிட்டார். சில குறிப்புகளை எடுத்துக்கொண்டார். பிறகு அதட்டினார் 'ஒங்க பேரு என்னம்மா?' "சரஸ்வதி ஸார்.' நீங்கதான் மதிய உணவு பதிவேட்ல எழுதுனவங்க?" "ஆமாம் ஸார்.' 'ஒங்களுக்கு கொஞ்சமாவது பொறுப்பு இருக் காம்மா? வருகைப் பதிவேட்ல, ஆப்ளெண்டான மாணவன், மதிய உணவுப் பதிவேட்ல பிரசண்டாகி இருக்கான் இந்தா பாருங்க, மூணாவது வகுப்பு மூக்கன். இந்த தேதி வரல, சீதேவி வரல, இவங்க மதிய உணவு பதிவேடுப்படி சாப்பிட்டிருக்காங்க. வகுப்புக்கே வராத வங்க எப்படி சாப்பிட முடியும்? கவர் மென்ட், தலைக்கு பத்து பைசா வீதம் கொடுக்கிற பணத்துக்கு கணக்கு எழுதற லட்சணமா இது? மிஸ் அப்ரோபிரியட் பண்ணலாமா? இது கையாடுன குற்றம்... நம்பிக்கை மோசடி, நான் யாரையும் விடப்போறதில்லை. இந்த ரிக்கார்ட்ஸ் எல்லாம் என்கிட்டய இருக்கட்டும்.' தங்கப்பாண்டி குழைந்தார். 'ஏன் டீச்சர், ஒங்க கிட்ட கொடுத்த காரியத்த பொறுப்போட செய் யாண்டாமா? சாப்பிடுறவங்கள சரியா எண்ணிப் பார்க் காண்டாமா? வழக்கமா சோறு போடுவதை சூபர்வைஸ் செய்யுற ஒங்களுக்கு ஏன் இது தெரியல?"