பக்கம்:புதிய திரிபுரங்கள்.pdf/134

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

128 சு. சமுத்திரம் 'இருபாதாயிரம் கிராம்.' "எத்தன கிலோ?' 'இருபது கிலோ.' 'ஒரு நாளைக்கு பதுங்குறது இருபது கிலோன்னா, இருபது நாளைக்கு எவ்வளவு பதுங்கும்?' 'நானூறு கிலோ.' 'ஒரு கிலோ கோதுமை மாவு இரண்டு ரூபாய் என்றால், நானுறு கிலோ எவ்வளவு தேறும்?' சிறிது மவுனம். பிறகு பதில்கள் 'எண்ணுறு ரூபாய்.' 'ஒருவனுக்கு நாலு கிராம் எண்ணைன்னா, இரு நூறு பேருக்கு? "எண்ணுறு கிராம்.' "இருபது நாளைக்கு?' "பதினாறாயிரம் கிராம்.' எத்தன கிலோ? பதினாறு கிலோ.' "ஒரு கிலோ எண்ணைக்கு!' சண்முகத்தைப் பார்த்துத் திமிறிய தங்கப்பாண்டியை, டெப்டி-இன்ஸ்பெக்டர் "த டு த் த ா ட் கொண் டு, 'போதும்... நிறுத்துங்க... ஐ... ஸ்ே. ஸ்டாப் திஸ் ரப்பீஸ்...' என்று கத்தினார். சண்முகம் அமைதியாகச் சொன்னான்: 'இன்னும் கொஞ்சம் பாக்கி இருக்கு ஸார். ஒருவர்கிட்ட ஐம்பது கிராம் கமிஷன்னா பதினைந்து பேர்கிட்ட எவ்வளவு தேறுமுன்னு கேட்கணும்?' 'கணங்கள் போட்டு கணக்குச் சொல்லிக் கொடுக் காமல், தத்துப் பித்துன்னு உளறுனால் என்னய்யா அர்த்தம்?