பக்கம்:புதிய திரிபுரங்கள்.pdf/135

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கேள்வித் தீ 129 'மதிய உணவு போடலன்னு தெரிந்தும், ஒரு ஆசிரியையை மேலதிகாரி அதட்டுறார்னால், இருப்புப் பதிவேட்ல எவ்வளவு கோதுமை மாவு இருக்குன்னு அவருக்குக் கேட்கத் தோணலன்னா, ஸ்டாக்கைப் பார்க் கணுமுன்னு அவருக்குத் தோணலன்னா, அந்த மேலதிகாரி யும் ஒரு ஊழல் பேர்வழின்னு அர்த்தம். இந்தப் பிள்ளை களைப் பார்த்து எத்தன நாளு மத்தியான உணவச் சாப்பீட்டிங்கன்னு கேளுமய்யா! இதோ... இங்க இருக் கிறதுல கால்வாசிப் பேர் வடக்கூர்’ பள்ளிக்கூட மாணவ -ம ணவிங்க. அவங்கள எழுந்திருக்கச் சொல்லட்டுமா? ஒரு வாரத்துக்கு முன்னால், இந்த ஆசிரியர் கோவிந்தன், கோதுமை மாவையும், எண்ணெய் டின்னையும் வண்டியில் ஏற்றிக்கிட்டுப் போய், தென்காசில வித்தாரு. ஆதாரத்தோட நிரூபிக்கிறேன். ஒங்கால ஆக்ஷன் எடுக்க முடியுமா? ஏதோ நாடகம் போடுறிங்க. அதுக்கு நாங்க தானா பாத்திரங்களா ஆகணும்? வந்துட்டார் பெரிசா, எல்லாக் கஷ்டத்தையும் நீக்கப் போறவர் மாதிரி. 'பெரிய அதிகாரியையா அவமானப்படுத்துற? இரு... இரு' என்று சொல்லிக்கொண்டு, தங்கப்பாண்டி, டெப்டி யைக் கைத்தாங்கலாக அனைத்துக்கொண்டே வெளியே போனார். மானேஜர் அறைக்குப் போகாமலும், வேதப்" பள்ளிக்கூடத்திற்குப் போகாமலும் பஸ் நிலையத்தைப் பார்ததுப் போனார்கள். சீனிவாசன், ஒரளவு வேர்த்துப் போயிருந்த சண்முகத் திற்கு, தன் வேட்டி மடிப்பை வைத்து வீசிக்கொண்டே 'எல்லாத்தையும் போட்டு ஒடச்சது சாதான். ஆனால்... வேதப் பள்ளிக்கூட பையங்க வந்திருப்பதை சொல்லி யிருக்கப்படாது. செக்ஷன்களை குளோஸ் பண்ணிட்டா, நம்மள்ல நாலுபேரு குளோஸ் ஆயிடுவாங்க' என்றார். சண்முகம் அவரை, தங்கப்பாண்டியைப் பார்ப்பது மாதிரி பார்த்துப் பேசினான்: 'நாம் வெறும் சம்பளத்துக் 9 سس. Lq