பக்கம்:புதிய திரிபுரங்கள்.pdf/136

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

130 சு. சமுத்திரம் காகப் போராட ப்படாது. ஒரு லட்சியத்துக்காகப் போரா டனும். நீதியை நிலைநாட்டுவதற்காகத்தான் சம்பளத் தைப்பற்றிப் பேசணுமே தவிர, சம்பளத்திற்காக நீதியைப் பற்றிப் பேசக்கூடாது. இன்றைய உரிமைப் போராட்டங் களை பொதுமக்கள் அலட்சியப்படுத்துவதற்கு இந்த குழப்படி தான் காரணம். இந்தப் பள்ளிக்கூடத்துல நடக்கிற அநீதியை, சமுதாய அநீதிகளோடு இணைத்து எல்லாவற்றையும் கொளுத்தப் பார்க்கணும். அதுதான் உன்னதமான குறிக்கோள். அந்தக் குறிக்கோளை நோக்கிப் போவதற்கு முன்னால், நம்முடைய பலவீனங் களையும் நாம் உதறனும், தூக்கி எறியனும். பல பள்ளிக்கூடத்துல ஒன்று முதல் ஐந்தாவது வகுப்பு வரைக்கும் இரண்டு ஆசிரியர்கள் இருக்காங்க பல ஒராசிரியர் பள்ளிக்கூடங்கள் இருக்கு. இந்த நிலைமை யிலே, இல்லாத செக்ஷன்களை போட்டுக்கிட்டு, அவற்றில் நம்மை ஆசிரியர்களாகக் காட்டிக்கிட்டால், நமக்கு மனுஷனாய் இருக்கவே யோக்கியதை கிடையாது. அப்புறம் மனுஷங்களை உருவாக்கிற பிள்ளைகளுக்கு, ஆசிரியராய் இருக்க நமக்கு என்ன யோக்கியதை இருக்கு?’’ எல்லோரும் தத்தம் வகுப்புகளுக்குப் போய்விட் டா கள். சரஸ்வதி தன் வகுப்பிலிருந்து அவள் வகுப் புக்குப் புறப்பட்டாள். 'நன்றி சொல்லணும்... மனதத் இறந்து இன்னொன்றையும் சொல்லிடனும். இதுக்கு மேல பொறுக்க முடியாது...' நடந்து வந்தவள், முன் நெற்றி சுருங்க, கண்கள் கோவைப் பழங்களாக, மேஜையில் ஊன்றிய முழங்கை களில், முகத்தை வைத்துக்கொண்டு. எதையோ தொலை நோக்காகப் பார்த்த அவனைக் கலைக்கப் பயந்தாள். அந்த மோனத்தில் தொற்றிக்கொண்டவள் போல், அதற்குப் பயந்தவள்போல், பக்தி செலுத்துபவள் போல், அவள் திரும்பிவிட்டாள்.