பக்கம்:புதிய திரிபுரங்கள்.pdf/137

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7 அடுத்த நாள், ஞாயிற்றுக்கிழமை. தங்கப்பாண்டி தோல்பையைத் தூக்கிக்கொண்டு தென்காசிக்கோ, திருநெல்வேலிக்கோ போய்விட்டார். சிலரை வீடுகளில் போய் பார்த்தால்தான், அவர்களை செளகரியப்படுத்தி தானும் செளகரியமாக முடியும் என்பதை அனுபவத்தால் அறிந்திருந்த அவர், புதிய அனுபவத்தின் பொருளறிய மாட்டாதவராய் பையில் பொருளோடு போய் விட்டார். கணவன் சொல்லாமலே நடந்த விஷயங்களைக் கேள்விப்பட்ட ரா சம்மா, பஞ்சாயத்துக் கிணற்றுப் பக்க மாகப் போகும்போது 'எச்சிக்கல நாயுவளுக்கும், இரப்பாளி பய மக்களுக்கும் வாழ்வு வந்திருக்கத பாரு. வேலையில சேருறதுக்கு கை கால பிடிக்கது அப்புறம் அடுத்துக் கெடுக்கது. வாய்க்கரிசி இல்லாத முண்டைவளும், கலாவியா சுத்திக்கிட்டிருந்த பயலுவளும் வாத்தியாரா வந்தா, ஊரு உருப்பட்டாலதான்' என்று ஒவ்வொரு பேச்சுக்கும் முற்றுப்புள்ளி போலவோ அல்லது 'கமா' போலவோ 'து' என்று சொல்லிக்கொண்டே துப்பிக் கொணடு, அவள் பேசியபோது, கிணற்றில் தண்ணிர் எடுத்துக்கொண்டிருந்த சண்முகத்தின் தாய்மாமா பெண் டாட்டி, அவளை மேற்கொண்டும் பேச விட வில்லை. போகவும் விடவில்லை. "சர்க்கார் கொடுக்கிற கோதும மாவ தின்ன கொளுப்புலயாடி பேசுற? ஊர்ச் சோத்த தின்ன பன்னியே! தைரியம் இருந்தா நேருக்கு நேரா பேசேண்டி! ஏண்டி...ஜாடையில பேசுற" என்று சொல்லிவிட்டு தோண்டிப் பட்டை கயிற்றை அவள் கிணற்றில் இருந்து வெளியே இழுத்தபோது, அது எமனுடைய “பாசக்கயிறு மாதிரி ராசம்மாவுக்கு பட்டது.