பக்கம்:புதிய திரிபுரங்கள்.pdf/141

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கேள்வித் தீ 135 நடப்பான்னு காலையில உபதேசம் செய்யுறாங்க. முன்வnப் வேற கொஞ்ச நேரத்துக்கு முன்னால வீட்டுக்கு வந்து, மொதலாளி, எங்க ஜாதிப் பொண்ண பறமுண் டன்னு தங்கப்பாண்டி சொல்லிட்டாராம். நீங்க கேட்டு’ தாறியளா? நாங்களே கேட்கனுமான்னு சேரிக்காரங்க சொல்லு:தாங்கப்பா. விவேகியான நீ இப்டி நடந்துக்கிட லாமான்னு' கேட்கிறான். யாரு? வரிப்பணத்த ரசீதுல காட்டாம, வாயில காட்டுற இந்த முன்ஸிiப். இந்த சண்முகம் பயல் ஊர்முழுக்க பிரச்சாரம் செய்திருக்கான். தலைமை ஆசிரியர், சமயம் தெரியாமல் உள்ளே வந்தார். தங்கப்பாண்டி சீறி விழுந்தார். 'என்ன லார் நீங்க சரஸ்வதி ஒரு வாரம் கணக்கு எழுதாமல் விட்டி ருக்காள். நீங்க செக் பண்ணாண்டாமா? நீங்க வந்த பிறவுதான் இந்தப் பள்ளிக்கூடம் உருப்படியில்லாமப் போயிட்டுது.' தங்கச்சாமிக்கு இன்றைக்குத்தான் கோபம் வந்தது. ஆகையால் அதிகமாக வந்தது. 'சோறு போடாமல போட்டதா எழுதுனதே பெரிய காரியம். அவள் கிட்ட கேட்டுட்டு, எதையாவது வாங்கிக் கட்டிக்கச் சொல்றி யளா?' ' தலைமை ஆசிரியர் மாதிரி நடந்துக்கமாட்டேங் கிறிய, முன்னால இருந்தவரு ஒவ்வொருவர் கண்ணுலயும் விரலை விட்டு ஆட்டுவாரு. ஒங்க கடமையைக்கூட மறந் துடுறிய. எந்த ஆசிரியராவது ஒங்கள மதிக்காங் 35ςη Ι 2 " " தங்கச்சாமி, தங்கப்பாண்டியின் கண்ணில் விரல் விடுவதுபோல் பேசினார். "நீங்க மதிச்சால்லா, அவங்க மதிக்கதுக்கு ஹெட்மாஸ்டரா...ஒங்ககிட்ட மாரடிக்கத வி...நாலு எரும மாட்ட மேய்க்கலாம். எனக்கா கடமை யைப் பற்றி சொல்றீங்க? அப்படிப் பார்த்தால், ஒங்களைக்