பக்கம்:புதிய திரிபுரங்கள்.pdf/144

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

138 சு. சமுத்திரம் அப்பாவித்தனத்தில் இருந்த சண்முகம், 'மாமா செக் பண்ணுவதற்காக எஸ்.எஸ்.எல்.சி. சர்டிபிக்கட்டையும் டி.எஸ் எல் சி. சர்டிபிகேட்டையும் கொடுத்தான். பிறகு அவர் கொடுக்கவில்லை. ஒரு தடவை அவன் கேட்ட போது 'ஒங்ககிட்ட இருந்தான்ன, என்கிட்ட இருந் தான்ன? இன்கிரிமென்ட், அது இதுன்னு ஆயிரம் வரும். உடனேயே டெ ப்டி-இன்ஸ்பெக்டர்கிட்ட காட்டணும். அதுக்குத்தான் வச்சிருக்கேன். மாப்பிள்ளைக்கு நம்பிக்கை இல்ல போலுக்கு. ஏல... பெருமாளு... வீட்ல போயி’’ என்று அவர் சொன்னபோது 'பரவாயில்ல மாமா...' என்று சண்முகம் திருப்பிச் சொல்லிவிட்டான். தங்கப்பாண்டி இப்போது கிண்டலாகப் பேசினார். 'என்ன சண்முகம் ஸார்... சர்டிபிக்கட்டை கொண்டு வாlங்களா? நான் டெப்டி இன்ஸ்பெக்டருக்கு இன்னைக்கே இதை அனுப்பி வைக்கணும்.' சண்முகம், இன்னும் அவரையே பார்த்தான். தங்கப் பாண்டி, மினுக்காகச் சிரித்து, தளுக்காகப் பேசினார். 'இப்போகூட ஒங்களுக்கு சான்ஸ் கொடுக்கேன் என் வம்புக்கு வரமாட்டேன்னு ஒரு வாக்கு கொடுத்திங்கன்னா போதும் சண்முகம், அவர்மீது கண்களை ஊடுருவ விட்டான். 'டவுனில் ஆசிரியர் தலைவர் மொதல்ல ஒங்கள உதைக் கணும்யா என்று சொன்ன வார்த்தை, நெஞ்சில் உதைத்தது. பிள்ளைகளுக்கு தனிப்பட்ட முறையில் சொன்ன லெனின், அவன் எதிரே நின்று சிரித்தார் மாணவர்களுக்கு அவன் சொல்லிக் கொடுத்த பகத்சிங் முன்னால் வந்து நிறைான். பல்லைக் கடித்துக்கொண்டு கைகளை அடக்கிக்கொண்டான். பிறகு ஒரு முடிவுக்கு வந்தவன்போல், 'நானும் அதைத்தான் சொல்றேன் இப்போகூட ஒங்களுக்கு சான்ஸ் கொடுக்கோம். நீங்க திருந்துறதாய் இருந்தால்...' என்றான்.