பக்கம்:புதிய திரிபுரங்கள்.pdf/147

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கேள்வித் தி 141 கையெழுத்தையும், தேதியையும் போட்டுவிட்டு, தங்கப் பாண்டியை நோக்கி, பெருவிரலை வில்லாகவும், ஆள் காட்டி விரலை அம்பாகவும் வைத்து, மனுவை அலட்சிய மாக சுண்டிவிட்டுவிட்டு, வெளியேறிவிட்டான் கூரைக் கட்டிடம் அதிரும்படி ஹிட்லர் கேட்டால்லா, இந்த ஆளு கேக்கதுக்கு' என்ற வார்த்தை, தங்கப்பாண்டிக்கு நன்றாகக் கேட்டது. அவன் எழுதியதைப் பார்த்தார். கொஞ்சம் அசந்துவிட்டார். டெப்டி-இன்ஸ்பெக்டரின் ஆதரவோடு இந்த புகார் மனு வந்திருப்பதாக தான் சந்தேகிப்பதாகவும், தன் சர்டி பிக்கேட் மானேஜரிடமே இருப்பதாகவும், இப்போது நம்பிக்கை மோசடி செய்யும் மானேஜர்மீது போலீஸில் புகார் செய்யுவும், சட்டப்படி இதர நடவடிக்கைகளை மேற்கொள்ளவும், மாவட்ட கல்வி அதிகாரி தனக்கு அனுமதி வழங்க வேண்டும் என்றும், இதற்கிடையில் சர் டிபிக்கட்டைப்பற்றி அறிய வேண்டுமானால், தான் படித்த உயர்நிலைப்பள்ளியில் போய் விசாரித்துக் கொள்ளும்படி "பணிவன்புடன் கேட்டுக் கொள்வ தாகவும் அவன் எழுதியிருந்தான். தங்கப்பாண்டி, தன்னம்பிக்கையோடு சிரித்துக்கொண் டார். 'பள்ளிப்படிப்பு புள்ளிக்கு உதவாது என்கிறதை நிருபிச்சுட்டான். அனுபவத்துக்கு, அறிவு ஈடாகாது என்பதைக் காட்டிட்டான். டெபுடி-இன்ஸ்பெக்டரையும் சேர்த்து இழுத்திருப்பதால், மேலதிகாரிகள் டிபார்ட் மெண்ட் விவகாரமாய் எடுத்துக்கொள்வார்கள். அவர்கள் நியாயத்தை விட்டுக் கொடுத்தாலும் கொடுப்பார்களே தவிர, டிபார்ட்மெண்டை விட்டுக் கொடுக்கமாட்டார் கள். மாட்டிக்கிட்டான். இசகு பிசகா மாட்டிக் கிட்டான். தங்கப்பாண்டி தையல்-ஆசிரியனைக் கூப்பிட்டு, இடையிலே கார்பன் வைத்த இரண்டு பேப்பர் "லெட் டை" ரெடி பண்ணச் சொன்னார். அந்தப் பையன்