பக்கம்:புதிய திரிபுரங்கள்.pdf/149

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கேள்வித் தீ 143 என்று அரற்றினாள். அவள் கையில் இருந்த காகிதத்தில் கண்ணிர்த் துளிகள் தெறித்துச் சிதறின. சண்முகம் அந்தக் காகிதத்தை வாங்கிப் படித்தான். "ஆசிரியை சரஸ்வதிக்கு, தங்களின் பதவி விலகல் கடிதம் ஏற்றுக் கொள்ளப்பட்டது. குடும்ப சூழ்நிலையின் காரணமாக, பதவி விலகுவதாக தாங்கள் குறிப்பிட்ட காரணம், நன்கு ஆய்வு செய்யப்பட்டு, தங்களின் வேண்டுகோளை ஏற்றுக் கொண்டாகிவிட்டது. ஆகை யால் நாளையிலிருந்து தாங்கள் வேலைக்கு வரவேண்டிய தில்லை. உங்களின் சேவைக்கு, பள்ளி நிர்வர்கம் நன்றி தெரிவித்துக் கொள்கிறது' என்று உத்தரவு கூறியது. எல்லா ஆசிரியர்களும் பிரமித்து நின்றார்கள். ஒவ் வொருவரும், தங்களுக்கும் சிறிது நேரத்தில் இதே மாதிரி யான ஒலை வரலாம் என்று தங்கப்பாசண்டியின் அறை யைத் திரும்பித் திரும்பிப் பார்த்தார்கள். சரஸ்வதி அழுகையை நிறுத்தவில்லை. சண்முகம் அசந்துவிட்டான். அவள் அழுகைக்கு தானும் ஒரு காரணம் என்பதுபோல் உதட்டைக் கடித்துக்கொண்டான். ஒருநிமிட நேரந்தான். சரஸ்வதி, ஆசிரியை கனகத்தின் தோளில் சாய்ந்துகொண் டாள். மயங்கி விழுந்துவிடுவாளோ என்று சொல்லும் அளவிற்கு, அவள் கண்கள் நிலைகுத்தி நிற்பவைபோல வெறித்து நின்றன. கை கால்கள், பக்கவாத நோயாளி மாதிரி ஆடின படித்த படிப்பு. பெற்ற பயிற்சி, வாங்கிய சம்பளம், அனைத்தும் இனிமேல் நீர்மேல் எழுத்தாய் போனதுபோல், அவள் கன்னங்களில் நீர் பெருக்கெடுத்து, மோவாயில் வந்து சங்கமமாயின. இனிமேல் எப்போது வேலை கிடைக்கும் என்று நினைப்பவள் போல் மோவாயை நிமிர்த்தியவள், எப்பவுமே கிடைக்காது என்பதுபோல் தலையை, அங்குமிங்குமாக ஆட்டினாள். சண்முகத்தைப் பார்த்து, 'அ ந் த க் காகிதத்தைக் கொடுங்க. நான் ஆசிரியையா வேலை பார்க்கத் தகுதி