பக்கம்:புதிய திரிபுரங்கள்.pdf/153

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கேள்வித் தீ 147 மாப்பிள்ளையை உதறுற அளவுக்கு திமிறு வந்துட்டு என்ன? பே ச | ம போங்க. இது முடிஞ்சிபோன சமாச்சாரம்.' 'தங்கப்பாண்டி! அப்படில்லாம் பேசப்படாது. ஒன் கா லுல வேணுமுன்னாலும்...' ஆசிரியர்களோடு நின்ற சரஸ்வதியால், மேற் கொண்டு நடக்கப்போவதை கற்பனை செய்துகொண்டு அங்கேயே நிற்க முடியவில்லை. மானேஜர் அறையை நோக்கிப் போனாள். வாசலுக்கு வெளியே நின்று கொண்டே கத்தினாள். அப்பா...எவன் காலுலயும் விழாண்டாம். அவன் ஒம்ம காலுல விழப்போற காலம் வந்துட்டு. நீங்க வீட்டுக்குப் போங்க. மொதல்ல வெளிய வாங்க. வாங்கப்பா...வாம்மா..." தங்கப்பாண்டி கொஞ்சம் வார்த்தையை விட்டுட் டார். 'பாத்தியா, அவன் இவன்னு பேசுறத? தேவடியா முண்டைக்கு வாயப் பாத்தியனா' - 'அவன்' என்று சொன்னதுக்காக, மகளை அடிக்கப் புறப்பட்ட பொன்னையாவுக்கு யாரை அடிக்கிறோம் என்று தெரியவில்லை. எத்தனையோ பனைமரங்களை ஒரே ஒரு கோடாரியால், தன்னந் தனியாகச் சாய்த்த அந்த மனிதர், தனக்கு எதுவும் தெரியாமலே, தங்கப் பாண்டியின் கழுத்தைப் பிடித்துத் தூக்கி, மேஜையில் போட்டார். குப்புறப் புரண்ட தங்கப்பாண்டி தலையை நிமிர்த்தியபோது, அதை முடியோடு சேர்த்துப் பிடித்து மேஜையில் மோதினார். தங்கப்பாண்டி 'அய்யோ... அய்யோ' என்று கத்தினார். மனைவிக்காரி புருஷனைப் பிடித்து இழுத்தாள். தப்பை உணர்ந்தவர்போல், பொன்னையா தங்கப்பாண்டியை விட்டுவிட்டு, தன்னை நம்பாதவர்போல் சிறிது விலகி நின்றுகொண்டு 'யாரப் பாத்துல தேவடியா முண்டன்ன? ஒன் வீட்டு சங்கதிய நான் சொல்லட்டுமாடா? செ த் தா லு ம் சொல்ல