பக்கம்:புதிய திரிபுரங்கள்.pdf/156

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

150 சு. சமுத்திரம் தெரியுதோ?' என்று நினைப்பவர்போல் வழிமறித்து நின்ற வழிகாட்டிகளை நம்பாதது போல் பார்த்தார். இருந்தாலும் அவருக்கு ஒரு நப்பாசை. பங்காளிகள் வரலாம். எவராவது போலீஸுக்குச் சொல்லலாம். அவரது எண்ணத்தை யூகித்தது போல், சண்முகம் மீண்டும் கர்ஜித்தான்: 'பழைய காலமில்ல ஸார்! ஒங்களுக்கு ஆதரவாய் யார் வந்தாலும் சரி, எங்களை வீழ்த்திட்டுத்தான் ஒங்கள மீட்கலாம். நீங்க எங்க கோரிக்கைக்கு இணங்குமுன்னால, ஒங்கள விடப்போற துல்ல. என்ன நடந்தாலும் சரி...எப்படி நடந்தாலும் சரி... ஒங்களுக்கு அதிகாரிங்கன்னா, எங்களுக்கு ஆசிரியர் கூட்டணி இருக்கு ஊர் இருக்கு." புலியைச் சுற்றி வளைத்து வீழ்த்தும் காட்டு நாய் கூட்டம் மாதிரி, ஆசிரியர்கள் வழியடைத்து நின்றார்கள். தாங்கள் சொல்லிக் கொடுத்த வரலாற்றுப் பாடங்களுக் குத் தாங்களே பரீட்சை எழுதத் தீர்மானித்தவர்களாய்த் தோன்றினார்கள். அக்கிரமக்காரனுக்கு, முடிவும் அக் கிரம ரூபத்தில்தான் வரும் என்று ஹிட்லரையும், முசோலினியையும், உதாரணமாகக் காட்டி, மாணவர் களுக்கு பாடம் போதித்தவர்கள், உள்ளூர் பருத்தியின் மூலம் உலகச் சமாச்சாரங்களைச் சொல்லிக் கொடுக்க வேண்டும் என்ற பேஸிக் பயிற்சியை நினைத்தவர் களாய், அந்த ஆசிரியர்கள் இப்போது உள்ளுர்’ தங்கப் பாண்டியைக் காட்டி, உலகதல விரோதிகளை அடை யாளம் காட்ட விரும்பியவர்கள்போல், அசையாது நின்றார்கள். இந்திரா மட்டும் சிறிது விலகி நின்றான். தங்கப்பாண்டியை அடிக்கப் போன வேலாயுதத்தை சண்முகம் பிடித்துக் கொண்டான். ஊரிலிருந்து, ஆண்களும், பெண்களுமாகத் திரண்டு கொண்டிருந்தார்கள். சண்முகத்திற்காகச் சிலர். சரஸ்வதிக்காகச் சிலர். சாப்பாடு போடவில்லை என்று