பக்கம்:புதிய திரிபுரங்கள்.pdf/157

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கேள்வித் தீ 1:1 சிலர். ராஜலிங்கத்தின் தூண்டுதலால் சிலர். ராசம்மாவின் திமிரால் சிலர். சேரியில் இருந்த சிலர். இப்படிச் சிலர் சிலராய் கூடியவர் பலப்பலராயினர். பலவகையான பேச்சு. பாக்கை வெட்டுவது போன்ற பேச்சு. 'அந்தப் பொண்ணு, அவன் வீட்ல வேலைக்காரி மாதிரி வேலை பார்த்தாள். அவளுக்கா சீட்டக் கிழிக்கது? யாரு, நம்ம சண்முகத்துக்கா ஒலை கொடுத்திருக்கான்? நாம அம்மங்குடை கணக்கை எப்படி ஒழுங்கா எழுது றோம். அதுமாதிரி இந்த தங்கப்பாண்டியும் ஒழுங்கா இருந்திருந்தா, இப்படி நடக்குமா? என்னவோ, அவனுக்கு வால் பிடிக்கியரு...தெனமும் பிள்ளியளுக்கு சாப்பாடு போடணும். இவன் போடுறானா? இவனுக்கு இன்னைக்கு நல்ல சாப்பாடு போடணும். "தர்ம அடி கொடுக் கணும்வே.' உள்ளே சிறை வைக்கப்பட்ட தங்கப்பாண்டியின் உடம்பு, வேர்வையால் குளிர்ந்து கொண்டிருந்தபோது, ஆசிரியர்களின் மேனி கொதித்துக் கொண்டிருந்தது. வெளியே இரைச்சல், பேரிரைச்சல். வீட் டில் இருந்து துள்ளிக் குதித்து வந்த ராசம்ம வை 'வாடி! சீக்கிரம் வா. ஒன் பனங்கா மூஞ்சிய கொத்திப் போட்டு அவிக்கோம்' என்று பெண்களில் ஒருத்தி சவாலிட்டபோது, ராசம்மா பாதி வழி யி லே யே நின்றாள். அநியாயக்காரன் சொல்வதையெல்லாம் கேட்டுக் கொண்டிருக்காமல், அவன் ஒவ்வொரு செயலையும் ஏன் என்று கேட்டு, தாங்கள் பார் என்பதையும் கேட்டுக் கொண்டால், அதில் பிறக்கும் கேள்வித்தி, ஆயிரம் வேள்வித் தீயைவிட பிரகாசமாக விளங்கும். மனதிலே கிளம்பும் கேள்விப்பொறி, ஐம்பொறிகளிலும் தாவி, அண்டை அயலாரையும் பற்றி, ஊழித்தீயாக மாறும் என்பது நிரூபணம் ஆகிக் கொண்டிருந்தது.