பக்கம்:புதிய திரிபுரங்கள்.pdf/17

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புதிய திரிபுரங்கள் 11 குடிசைப் பக்கமாகப் போன சாமியார், ஒரு மணி நேரத்திற்குப் பிறகு கையில் மாலையுடனும், சந்தனம் குவிந்த ஆலிலையுடனும் கோவிலுக்குள் வந்தார். அங்கே, கிராமத்துச் சிறுவன் பாலுடன் தயாராக இருந்தான். எளிமையான அபிஷேகம் முடிந்து லிங்கம் இன்னொரு கிழிந்த வேட்டியால் அலங்காரம் செய்யப்பட்டு, லிங்கத் திற்கு மேல் விபூதியும், விபூதிமேல் சந்தனமும், சந்தனத் திற்குமேல் குங்குமமும் வைக்கப்பட்டு, சாமியார் கற்பூரம் ஏற்றியபோது 'ஈஸ்வரா...நீதாண்டா கேட்கணும்... நீதான் கேட் கணும் சின்ன வயசிலேயே புருஷன பறிகொடுத்தாலும், கற்பு தவறாம நடந்தேன். கையில கழுத்துல இருந்த நகை யெல்லாம் விற்று அவரோட தம்பிங்கள படிக்க வச்சேன். இதனால, பிறந்த வீட்டு கோபத்துக்குக்கூட ஆளானேன் அதைப்பற்றிக் கவலப்படாம இருந்த என்னை...என் மச்சினன்மாரே ரெக்கை முளைச்ச தைரியத்துல அடிச்சி விரட்டிட்டாங்க... சொத்துமில்லாம... பத்துமில்லாமப் போயிட்டேன்...இந்த வயசிலே எங்கப்பா போவேன்... ஈஸ்வரா...எங்கே போவேன்?’’ உணர்வுகளைப்போல், கிழிசல்களையே சேலையாய் அணிந்த ஒரு பெண், துக்கித்த கண்களுடன், நீர் மல்க நின்றுகொண்டிருந்தாள். சாமியார் கற்பூரத்தை ஏற்றாமல் அந்த நடுத்தர வயதுப் பெண்ணையே பார்த்தார் தானே அங்கே பெண்ணாகி நிற்பதுபோல் ஒரு பிரமை, தான் மட்டுமே பட்டதாக நினைத்த ஒரு கொடிய அனுபவம் தனக்கு மட்டுமே ஏகபோகமானதல்ல என்ற நினைப்பு, ஆறுதலை யும் ஆதங்கத்தையும் கொண்டுவர, அவர் மனதை நிலைப் படுத்திக் கொண்டு கற்பூரத்தை ஏற்றினார். பிறகு புற