பக்கம்:புதிய திரிபுரங்கள்.pdf/18

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12 சு. சமுத்திரம் நிகழ்ச்சிகளால் தன் மனம் பாதிக்கப்படுவதை உணர்ந்து, அதை வழிப்படுத்த நினைத்தவர்போல் ஏதோ ஒரு வைராக்கியத்துடன் க ண் க ைள மூடிக்கொண்டு, வடமொழியின் சாஸ்திரங்களிலும், தமிழ்மொழியின் தோத்திரங்களிலும் எழுந்தருளி சாத்திரமும் தோத்திரமு. மாய் ஆன ஈசனை நெஞ்சிற்குக் கொண்டுவந்து, நெஞ்சற தியானித்தார். அரை மணி நேரத்திற்குப் பிறகு, அவர் கண்விழித்துப் பார்த்தபோது, அவர் கண்கள் தானாகவே அந்த புலம்பிய பெண் இருந்த இடத்தை நோக்கின. அந்த இடமோ அவள் உட்கார்ந்த சுவடில்லாமலேயே வெறுமை யாக இருந்தது. சாமியார் தன் விருப்பத்திற்கு எதிராகவே எழுந்து, கோயிலுக்கு வெளியே வந்து, சற்று நடந்து அந்தப் பெண் இருக்கிறாளா என்பதுபோல் பார்த்தார். அவளைக் காணவில்லை. மீண்டும் கோவிலுக்குள் வந்து சதுரக் கல்லில் உட்கார்ந்தார். இப்போது அவரது சொந்த அனுபவமே அவரிடம் பேசியது. 2 எழுத்தறிவில்லாத ஒரு ஏழைக் குடும்பத்தில் தலை மகனாய்ப் பிறப்பதே பாவம். அந்தத் தலைமகன், அரை குறையாகப் படித்துவிட்டு, அன்றாடம் அடுப்பை மட்டும் எரிய வைக்கும் மாதச் சம்பளத்தில் இருப்பது கொடிய பாவம். அவன் இந்த லட்சணத்தில் நேர்மையாய் இருந்தால் தொலைந்தான். முதல் பிள்ளை, அலுவலகத் தில் ஒவ்வொரு நாளும் தங்கம் தங்கமாக வெட்டியெடுத்து விற்பதாகவும். அவன் குடும்பம் செய்த நன்றியை” மறந்து தங்களை மறந்துவிட்டதாகவும் குடும்பத்தினர் நினைப்பார்கள். அப்படிப்பட்ட நினைப்பு அவர்களுக்கு வரவில்லையானாலும் அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள்