பக்கம்:புதிய திரிபுரங்கள்.pdf/19

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புதிய திரிபுரங்கள் 13 சொல்லிக் கொடுப்பார்கள். உத்தியோகத்திற்காகப் போடப்படும் வெள்ளைச் சட்டை, உறவுக்காரர்களுக்கு அவனிடம் 'கறுப்புப் பணம் இருப்பதுபோல் காட்டும். இப்படிப்பட்ட ஏழ்மையும் அறியாமையும் இணைந்த ஒரு பின்னணியில் இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பு, எப்படியோ கஷ்டப்பட்டு எஸ்.எஸ்.எல்.சி. தேறி சென்னையில், அரசாங்க அலுவலகத்தில் கிளார்க்காகச் சேர்ந்தார். அந்தச் சமயத்தில் தந்தை கண்ணை மூட, நண்டும் சிண்டுமாக இருந்த தம்பி தங்கைகளை கவனிக்க வேண்டிய நிலைக்கு ஆளாக்கப்பட்டார். நேர்மையை வழிபட்ட அவருக்கு அலுவலகத்தில் உபகாரம் இல்லை யென்றாலும், உபத்திரவங்கள் நிறைய கிடைத்தன. இதனால், கால் நூற்றாண்டுக் காலத்தில் கிடைத்த இரண்டு உத்தியோக உயர்வுகளும், அவருக்கு, ஒரு எக்ஸ்டிரா இன் கிரிமெண்டைத்தான் கொடுத்ததே தவிர, கணிசமான சம்பள மாற்றத்தை ஏற்படுத்தவில்லை. இருந்தாலும் ஊர் வாய்க்குப் பயந்தும், உண்மையான பாசத்தின் உந்துதலாலும், இரண்டு தங்கைகளையும் சக்திக்கு மீறி செலவழித்து நல்ல இடங்களில் சேர்ப்பித் தார். தம்பிகள் இருவரையும், சென்னைக்குக் கொண்டு வந்து படிக்க வைத்தார். ஒருவன் எஞ்ஜினியரிங் டிப்ளமா. இன்னொருவன் அசல் எஞ்ஜினியர். (இப்போது, டிப்ளமாக்காரன், எஞ்ஜினியரைவிட சம்பளத்திலும், கிப் பளத்திலும், அதிக உயரத்தில் கொடியைக் கட்டி யிருப்பது வேறு விஷயம்.) படித்த மாப்பிள்ளைக்கு மனைவியாகப் போகும் பெருமிதத்தில் ராமையா நீட்டிய கயிற்றுக்கு பிற பெண்கள் மரபுப்படி தாழ்த்து முன்னாலேயே தானாகவே கழுத்தைத் தாழ்த்திக் கொடுத்த அவர் மனைவி மைத்துனன்மார்களின் துணிகளைக்கூட, தானே ஒருத்தியாய் துவைத்துப் போட வேண்டிய நிலைமை ஏற்பட்டதற்காக, முதலில் கொதித்