பக்கம்:புதிய திரிபுரங்கள்.pdf/22

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16 சு. சமுத்திரம் விட்டார். அவர் சொல்லும் தத்துவங்களையெல்லாம் தன்னை மறந்து கேட்டுக்கொண்டார். பூஜையின்போது இதை எடு என்று சொல்வதற்கு முன்னாலேயே, பூஜைப் பொருட்களைக் குறிப்பறிந்து எடுத்துக் கொடுக்கும் ராமையாவை சாமியாருக்குப் பிடித்துப் போய்விட்டது. அதோடு சாமுத்திரிகா லட்சணப்படி, ஆன்மீகத்திற்காக அமைந்தவர் போலவும் சிஷ்யர் தோன்றினார். ஒரு நாள்- நல்லதோர் பெளர்ணமி தினத்தில், சாமியார் ராமையாவை இந்த அருவிநீர் விழும் தடாகத்தில் இடுப் பளவு தண்ணிரில் நிறுத்தினார். ஏதோ சில மந்திரங் களைச் சொல்லச் சொன்னார், பிறகு தான் உடுத்திய காவி வேட்டியை நீட்டி, அவரை அணியச் சொன்னார். அதன்பின் தன் கழுத்தில் கிடந்த ஒரு ருத்ராட்ச மாலை யைப் போட்டுவிட்டார். பின்னர் நெற்றிநிறைய அவருக்கு விபூதி பூசி, சிவா அர்ப்பணம்... சிவா அர்ப்பணம்" என்று சொன்னபோது உணர்ச்சிப் பேரியக்கத்தில் உந்தப்பட்ட ராமையா, நீரென்றும் பார்ககாமல், குருநாதா... என் அம்மையே... அப்பனே' என்று தழுதழுத்தக் குரலில் சொல்லிக்கொண்டே நீருக்குள் நெடுஞ்சாண் கிடையாக விழுந்து, குருநாதனின் பாதங்களைப் பற்றிக்கொண்டார். அவரைத் தூக்கிப் பிடித்து நிறுத்திவிட்டு, சாமியார் "மகனே... மந்திரம் தந்திரம் யந்திரம் என்று எதுவும் வேண்டாம். இப்போது நான் சொன்னவையெல்லாம், ஒன் மனதை வழிப்படுத்தும் பயிற்சிச் சொற்கள்தான். தேசக்கொடியை நாம் வணங்குவதால், தேசம், அந்த சின்னக் கொடிக்குள் அடங்கிவிட்டதாக எப்படி நினைக்க மாட்டோமோ, அப்படி ஈஸ்வரன் இந்த மந்திரத்துள் அடங்கிவிட்டதாக நினைக்கலாகாது. அவன் அனைத் தையும் கடந்தவன். அவனை உணர, மூட பக்திக்கு இணையானது எதுவும் இல்லை. எந்தச் சித்தும் இல்லை.