பக்கம்:புதிய திரிபுரங்கள்.pdf/24

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18 சு. சமுத்திரம் கொன்றுமாய் வந்த மனிதர்கள், இப்போது அருவியை நோக்கிக் கூட்டமாய் போனபோது, கோவிலை விட்டுக் குடிசைக்குப் போனார். ஆனால் நெஞ்சில் பதிந்த அந்தத் தொழு நோயாளியும், நடுத்தர வயது மாதும் போக மறுத்தனர். எந்த ஸ்லோகத்தை நினைத்தாலும், இந்த மனித ஸ்லோகங்கள் அதை விழுங்கிக்கொண்டு நின்றன. 3 ஒரு வாரம் போன இடம் தெரியவில்லை. சாமியார் கடுமையான யோகப் பயிற்சிகளால், மனித ஸ்லோகங்களில் இருந்துவிட்டு, மஹேஸ்வர ஸ்லோகத் திற்கு வந்துவிட்டார். இனிமேல் எது வந்தாலும், அது மனமென்ற மலையில் மோதி சுக்கு நூறாகும் என்று மூக்கின் நுனி யைப் பார்த்துப் பார்த்து ஒரளவு பெருமிதப்பட்ட சாமியாருக்கு, இன்னொரு நிகழ்ச்சி, வேறொரு மனப் பூதத்தைக் கிளப்பியது. மாலை வெயில், மங்கிய இருட்டாக மாறிக்கொண் டிருந்த வேளை. சாமியார் பூஜையை முடித்துவிட்டு, குடிசைக்குப் புறப்பட்டுக் கொண்டிருந்தார். அருவியில் குளித்த கோலத்தோடு, ஒரு வாலிபனும், இளம் பெண் னும், கோவிலுக்கு வெளியே சற்று தொலைவில் நின்று, லிங்கத்தையா, சாமியாரையா என்று கண்டுபிடிக்க முடியாத அளவிற்கு, கரங்கூப்பி, உடல் வளைந்து நின்றனர். அந்தப் பெண்ணும் அவனும் நின்ற தோரணை, சர்வேஸ்வரன்-சர்வேஸ்வரிபோல், சா மி ய | ரு க் குத் தோன்றியது. உரமேறிய உடலில், பூவேறிய மேனி ஒட்ட