பக்கம்:புதிய திரிபுரங்கள்.pdf/25

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புதிய திரிபுரங்கள் 19 தின்ற அந்த ஜோடி, அவரைப் பார்த்து லேசாக விலகியது. சாமியார், அந்த வாலிபனை உற்று நோக்கினார். இறந்து போன மகனின் சாயல். ஏதோ ஒன்று அவர், நெஞ்சு திரண்டு, குரல்வளையைப் பிடித்தது கிழிந்த வேட்டியின் கம்பீரமான தார்ப்பாய்ச்சலோடு நின்றவனுக்கு, மானசீக மாக, பேன்ட்-சட்டை போட்டு, கையில் ஒரு கடிகாரமும் கட்டி, அழகு பார்த்தார். அவன்தான்... அவனேதான்... லோகாயுதத்தில் தடுமாறி விழப்போய், எதையோ தாங்கிப் பிடித்தவர்போல், சாமியார், மூக்கின் நுனியை, கண்களால் நோக்கினார். பிறகு, புருவ மத்தியில், கண் நோக்கைப் பாய்ச்சினார். ஆனாலும், அவரால், தன்னைக் கட்டுப்படுத்த முடியவில்லை. அவனிடம் பேச வேண்டும்போல் இருந்தது. "உன் பேரென்னப்பா?' அந்தச் சாமியாரை அடிக்கடி பார்த்திருக்கும் அந்த வாலிபன், பேசியறியாத-பேச்சறியாத தன்னையும், சாமியாரையும் மாறி மாறிப் பார்த்தான். அவனாலும் ஏதோ பேச முடியவில்லை. அந்தப் பெண், அவன் விலாவில் இடித்து அவனை பதிலளிக்கச் சொல்வதுபோல் தோன்றியது. அவனும் சாமியாரை, சிரத்தையோடு பார்த்தபடி சொன்னான். 'வேல்சாமிங்க...' o p of * ,- گے جیسے 4 4 என்ன வேலை பார்க்கிறப்பா? 'இந்த அணைக்கட்டுல... ஒரு காண்டிராக்டர்கிட்ட கொத்துவேல பார்க்கேமுங்க." 'சம்பளமெல்லாம் எப்படிங்க...' இப்போது வேல்சாமி, சங்கோஜமில்லாமல் பதிலளித் தான்.