பக்கம்:புதிய திரிபுரங்கள்.pdf/26

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20 சு. சமுத்திரம் 'காண்டிரக்டர் கொடுக்கிற சம்பளத்தையும், அவன் எங்கள மாதிரி ஆட்கள படுத்துற பாட்டையும் நினைச்சால், கோவிலுக்கு வரத் தோணாதுங்க... கோவிலுன்னு ஒண்னு இருக்குமான்னு நினைக்கவும் தோணுங்க...' வேறு யாராவது அப்படிப் பேசியிருந்தால், சாமியார் பதில் பேசாமல் போயிருப்பார். ஏதோ அவன் பேச்சு அவரைக் குத்தவில்லை. சந்தம் வார்த்தைகளிலும், சாந்தம் முகத்திலும் நடனமாட சிரித்தபடி ஏதோ பேசப் போனபோது, அவன். அவள் விலா இடி தாளாமல், மன்னிப்புக் கோரும் தோரணையில் பேசினான். 'தப்பாப் பேசியிருந்தால், மன்னிச்சிடுங்க சாமி!' சாமியார் அவனையே உற்றுப் பார்த்தார். "தப்பாய் பேசியிருந்தால் என்கிறானே தவிர, பேசியது தப்பென்று நினைக்கவில்லை. கெட்டிக்காரப் பையன்... என் மகனும் இப்படித்தான். சாமியார் சந்தம் வார்த்தைகளிலாட , சாந்தம் முகத்திலாட சிரித்தபடி பேசினார். காய் வெளிப்படத் துவங்கியதும் பூவுதிர்வதுபோல், ஒருவனுக்கு ஞானம் முதிரும்போது, கோவில் உதிரும். நீ... எதையும் தப்பாவும் பேசல-புதிதாகவும் பேசல... இன்னும் சொல்லப்போனால், கோவில் தேவையில்லாத ஒரு காலம் வர வேண்டும். உலகமே கோவிலாகவும், நாமெல்லாம் முக்திகளாகவும் மாறும் காலம் வர வேண்டும். பூமியே ஆவுடையாராகவும், ஆகாய வெளியே லிங்கமாகவும் அனுமானிக்கப்படும் காலம் வர வேண்டும்!'" தன்பாட்டுக்குப் பேசிக்கொண்டே போன சாமியார், தான் பேசுவது அவனுக்குப் புரியாது என்பதைப் புரிந்து கொண்டவர்போல் சட்டென்று பேச்சை நிறுத்தினார்.