பக்கம்:புதிய திரிபுரங்கள்.pdf/27

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புதிய திரியுரங்கள் 21 அந்தப் பெண், ஏதோ ஒன்றில் இருந்து விடுபட மனமில் லாமல் விடுபட்டவள் போலவும், அந்த வாலிபன், சாமியாரிடமிருந்து விடுதலை பெற்றவன் போலவும் தத்தம் தலைகளை, ஒரு சுற்றுச் சுற்றிக்கொண்டார்கள. 'சரி... ரெண்டுபேரும் கோவிலுக்குள்ள வாங்க... விபூதி வாங்கிக்கலாமா? அவள் முன்னேறுவது போலவும் அவன் பின்னேறுவது போலவும் தோன்றியது. சாமியார், சிரித்தபடி அழைத்தார். 'சும்மா வாப்பா... இது அணைக்கட்டுமல்ல... இந்த லிங்கநாதர் காண்டிராக்டரும் இல்ல... வெறுப்பை எல் லாம் வெளியே விட்டுவிட்டு வாங்கோ.' லேசாகத் தயங்கியவனின் கையை, வலுக்கட்டாய மாகப் பிடித்து இழுத்துக்கொண்டு, அந்தப் பெண் கோவிலுக்குள் வந்தாள். அதைப் பார்த்த சாமியாருக்கு வேடிக்கையாகவும் இருந்தது. இந்த நாட்டில், பக்தி பெண்களால்தான் காக்கப்படுகிறது... இவனும் கொஞ்ச நாளில்' 'கான் சம்சாரத்துக்காக... கோவிலுக்குப் போனே னாக்கும், என்று பேசத் துவங்கலாம். வருவோர், போவோரை, தட்டில் இருந்து விபூதியை எடுத்துக்கொள்ளச் சொல்லும் சாமியார் அவர்கள் இரு வருக்கும், கைநிறைய விபூதி எடுத்து, நெற்றி நிறையப் பூசினார். அப்படிப் பூசும்போது, சிவ சிவா என்றும் சொல்லிக்கொண்டார். சாமியார் கொடுத்த சலுகையில் தைரியம் பெற்றவள் போல், அவள், அவரை நிமிர்ந்து பார்த்தாள். பிறகு, தன்னையறியாமலே, அவர் காலில் விழுந்தாள். மனிதன் மற்றவர் காலில் விழுந்து விழுந்தே காலால் நசுக்கப் பட்டான் அல்லது காலை வாரினான் என்பதை தெள்ளப் புரிந்தவன்போல் தயங்கியபடியே, கீழே குனிந்தவளைப்