பக்கம்:புதிய திரிபுரங்கள்.pdf/30

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24 சு சமுத்திரம் வாலைச் சிரிப்போடு, வார்த்தெடுத்த உடம்போடு அந்தப்பெண், இப்போது குலுங்கிக் குலுங்கி அழுதாள். சகலமும் துறந்த சாமியார், துடித்துப்போனவர் போல் "என்னம்மா குழந்தே...' என்று சொல்லியபடியே, லிங்கத்தைப் பார்த்தார். வேல்சாமி, அவள அழுவதால் வெகுண்டவன்போல், சாமியாரைப் பாதியும் அவளை மீதியும் நோக்கியபடி உணர்ச்சிப் பிழம்பாய் பேசினான். 'நீங்களும் உலக நடப்புல இருந்து விடுபட்டுத் தான் சாமியாராய் ஆகியிருப்பீங்க. ஒங்களுக்குத் தெரியாதது இல்ல சாமி... நான் சொல்றதைக் கேக்கணும். அப்புறம் நீங்க என்ன சொன்னாலும் நான் கட்டுப் படறேன்.' அவன் தொடர்ந்தான். 'நாமெல்லாம் சர்வேஸ்வரன் பிள்ளைங்க என்கிறது நிஜமுன்னால், இவ்வளவு போலித்தனங்கள் எதுக்காக இருக்கணும்? அதுவும் போலித்தனங்கள் பேசுறவன் களோ புண்ணியவான்கள் மாதிரி பேசுறது... வெந்த புண்ணுல வேல் பாய்ச்சுறது மாதிரி ஆயிடுது. ஈஸ்வரன் ஒருவன் இருந்தால், அவன் இந்த நிலைமைகளை அனுமதித்தால், அவன் தேவையே இல்லையோன்னுகூட எண்ணத் தோணுது சாமி.' 'இப்போ... என்னை மாதிரி ஏழையானவர்கள் நிலையை எடுத்துக்குங்க. இந்த அணைக் கட்டுமான வேல கோடிக்கணக்கான பணத்துல, பல காண்டிராக்டருங் கிட்ட பிரிச்சு கொடுத்திருக்கு நான் மேன்ஷன்' காண்டிராக்டருகிட்ட இருக்கேன். ஏழு வருஷமா தினக் கூலி... கேஷவல்லேபர். டெய்லி எட்டுரூபாய் சம்பளம். வீவு கிடையாது மருத்துவ வசதி கிடையாது. பி. டபிள்யு. டி தொழிலாளிங்களுக்காவது குவார்: டஸ் இருக்கு. யூனியனும் இருக்கு. நாங்க இருக்கது சேரும்