பக்கம்:புதிய திரிபுரங்கள்.pdf/32

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26 சு. சமுத்திரம் துரைகிட்ட வந்து, 'நீ எது கேட்டாலும் தாரேன். கையை நீட்டு, வாயை மூடு"ன்னு சொல்லிட்டார். இது கேட்கமாட்டங்கு... முன்னேறனும்னு புத்தி இருந்தால், இது அது க் கு சம்மதிச்சிருக்கணுமா இல்லியா... சொல்லுங்க சாமி?’’ சாமியார் சொல்லும் முன்பே வேல்சாமி மேற். கொண்டு பேசினான். "பாத்தீங்களா சாமி, இந்தப் பெண்ணோட புத்தி போற இடத்தை?’’ 'ஒனக்கு ஒண்ணுன்னா போய்யா... இனிமேல் என் கிட்ட வரப்படாது... நீயாச்சு, ஒன்னோட யூனிய னாச்சு "பாத்திங்களா சாமி. இவளோட கடைசி ஆயுதத்தை? ஒரு லட்சியத்தைப் பிடிக்கவனுக்கு சொந்த லாப நஷ்டம் ஒரு பொருட்டுலன்னு தெரியமாட்டக்கு. திருநாவுக்கரசரை, பல்லவ மன்னன் கடலுல தூக்கிப் போடும்போது அவர் விட்டுக் கொடுத்தாரா! உயிரை வெல்லக்கட்டின்னு நினைச்சாரா? "நாமார்க்கும் குடியல்லோ"முன்னு சொன்னாரா, இல்லையா? சொல் லுங்க சாமி! ஏன் சாமி அப்படிப் பாக்கீங்க? எங்கப்பா பஜனை பாடுனவர். நான்கூடப் பாடுனவன்... ஒங்க 'உலகத்துல எனக்குக் கெஞ்சம் பரிச்சயம் உண்டு!' அந்தப் பெண் இடைமறித்தாள். 'இது உருப்படாத கேஸ் சாமி... இது கதையே எனக்கு வேண்டாம்-நான் வாரேன் சாமி.' வேல்சாமி, போகப்போனவளின் கையைப் பற்றி, தன் பக்கமாக இழுத்தான். பிறகு, சாமியாரைப் பார்த்து விட்டு, சிறிது வெட்கப்பட்டவன்போல் தலை குனிந்தான்.