பக்கம்:புதிய திரிபுரங்கள்.pdf/33

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புதிய திரிபுரங்கள் 27 சாமியார் "பரவாயில்லப்பா...நானும் ஒரு காலத்துல குடும்பஸ்தன்தான்...' என்று சிரித்துக்கொண்டே சொன்னபோது அந்தப் பெண் சிரிக்க முடியாமலும், அழ முடியாமலும், சிரித்தாள். அழுகை வந்துவிடும் என்று அஞ்சியவள்போல, அழுதால் சிரிப்பு வந்துவிடும் என்று நாணியவள்போல தவித்தாள். வேல்சாமி இப்போது நளினக் குரலில் முறையிட்டான். "இந்தா பாரு வள்ளி... நம்ம விவகாரம் இப்பவே தீரணும்...சாமி சொல்றத இரண்டுபேரும் கேட்கணும். சாமியே சொல்லட் டும். சாமி! தான் சொல்றதைச் சொல்லிட்டேன். நீங்க நாங்க வசிக்கிற இடத்தையும், நாங்க படுற பாட்டையும் நேர்ல பார்த்தால் தவிர...அந்த என்னை மாதிரி ஆட்களால சொல்லுல விவரிக்க முடியாதுன்னாலும் கால்வாசி விளக்கிட்டேன். இப்போ நீங்க என்ன சொன்னாலும் அதுக்குக் கட்டுப்படுறேன். ஒங்க முகத்துல இருக்கிற வைராக்கியத்தை பார்த்த பிறகு, நீங்க எது சொன்னாலும் அது நியாயமாய் இருக்கும். ஏன்னா, எங்கப்பாவுக்கும் இது இருந்தது. அவர் செத்துட் டார். அவர் கடைபிடிச்ச நியாயம், அது பக்திவகையோட சேர்ந்ததுன்னாலும், அது என்கிட்ட, பாட்டாளி நியாய மாய் மாறி வந்திருக்கு. சொல்லுங்க சாமி...நான் சிதறிக் கிடக்கிற ஆட்களை ஒண்னு திரட்டி யூனியன் அமைக் கட்டுமா? இல்ல இதோ இருக்கிற லிங்கநாதர் பார்த்துக் கிடுவார்னு நினைச்சு சும்மா இருக்கட்டுமா? சொல்லுங்க சாமி! ஒங்ககிட்ட சாமியார்ங்கிற முறையில கேட்கல... என்னோட அப்பா ஸ்தானத்துல வச்சு கேக்கறேன். நான் யாரையும்விட என் அப்பாவை அதிகமாக மதிக்கிறவன்... சொல்லுங்க சாமி-நீங்க என்ன சொன்னாலும் கட்டுப் படறேன்." சாமியார் பரபரத்தார். 'மகனே மகனே' என்று கூவிய மனதை வாயரங்களில் ஆடவிடாமல் தடுத்தார்.