பக்கம்:புதிய திரிபுரங்கள்.pdf/37

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புதிய திரிபுரங்கள் 31 எதையோ உருட்ட நினைக்கும் கோபத்துடன் தெறித்து விழப் போகிறவைபோல் வெறித்து நின்றன. சுருக்குக் கயிற்றின் இறுக்கத்தால், அவள் கழுத்து விடமுண்ட கண்டன்’ போல் வீங்கியிருந்தது. அவளைப் பார்த்த சாமியாருக்கு, ஊத்துக்கோட்டைக்கு அருகே உள்ள ஈஸ்வரன் கோயிலில் மயங்கிய நிலையில் உமையாள் மடியில் தலைவைத்துக் கிடக்கும் ஈஸ்வரன் சிலைதான் நினைவுக்கு வந்தது. சாமியாரைப் பார்த்ததும், சடலத்தைச் சுற்றி நின்ற தொழிலாளிகள் அவருக்கு மரியாதையாக வழி விட்டனர். வள்ளியை குனிந்து பார்த்த சாமியார், "ஈஸ்வரா... ஈஸ்வரா...இது நியாயமா...நியாயமாடா...ஒன் முன்னால் என் கையால் கொடுத்த விபூதியே அவள் உடம்பை அஸ்தியாக்கிட்டே... சர்வேஸ்வரா, சர்வேஸ்வரா...' என்று தன்பாட்டுக்கு கூவிய சாமியார், சிறிது நிதானித்து, சிறிது தியானித்து வேல்சாமிய எங்கே...' என்று பொதுப்படையாகக் கேட்டார். தொழிலாளர்களில் ஒருவர் பதிலளித்தார்: 'முந்தா நாள் அம்மாவுக்கு மருந்து வாங்குறதுக்காக... கீழே போனவன் ஒரேயடியாகக் கீழே போயிட்டான் சாமி! லாரில அடிபட்டு-அடிபட்ட இடத்துலயே போயிட்டான் சாமி...' சாமியாரால் இ ப் பே ா து பேச முடியவில்லை. அழுகையை அடக்கி ஆகாயத்தைப் பார்த்தபடி கேட்டார்: 'விபத்தா...இல்ல...' 'வெளியுலகுக்கு விபத்து...ஆனால் எங்களுக்குத்தான் தெரியும், காண்டிராக்டரோட வேல... அணைக்கட்டுல சுவர் எழுப்புற எங்களுக்காக பேசுணவனுக்கு, அவரு கட்டுன சமாதி! ஏழை சொல்லு எங்கே அம்பலம் ஏறும் சாமி? போன வாரம்தான் சங்கத்தைத் துவக்கினோம்.