பக்கம்:புதிய திரிபுரங்கள்.pdf/39

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புதிய திரிபுரங்கள் 33 "வள்ளி... என்னை மன்னிச்சிடுமா. ஒன்னோட மரணத்திற்கும், ஒன்னவனோட மரணததுக்கும் நானும் காரணமாயிட்டேன்... நான் மட்டும் அவனை யூனியன் வேண்டாமுன்னு சொல்லியிருந்தால் அவன் கேட்டிருப் பான். இந்த நிலையும் வந்திருக்காது...எனக்கு அப்படிச் சொல்ல மனமில்ல... இப்பவும் மனமில்லே... தெய்வமாய் மாறிட்ட நீ... இதோ என் பிள்ளைகள் யூனியன் மூலம் தங்கள் போராட்டத்த வெற்றிகரமாய் நடத்த வழி காட்டம்மா...வரம் கொடு தாயே...' சாமியார் எழுந்தார். அத்தனை தொழிலாளிகளும் அவரை வியப்போடு பார்த்தார்கள். எவரோ ஒருவர். வேல் சாமியையும் வள்ளியையும் ஒங்களுக்குத் தெரியுமா சாமி என்று கேட்கப் போனார். சாமியார் ஆகாயத்தைப் பார்த்த தோரணையையும், தங்களை ஒவ்வொருவராக ஊடுருவிப் பார்த்த கண்களில்-அந்தக் கண்களையே எரிப்பதுபோல் தோன்றிய அக்கினிப் பிரவாகத்தையும் பார்த்துவிட்டு, சொல்ல வந்ததை விட்டுவிட்டு சொல்லப் போகிறவரையே பார்த்தார். சாமியார் ஏதாவது பேசுவாரா என்பதுபோல் எல்லோரும் பார்த்தார்கள். அவர் பேசவில்லை. குனிந்த தலை நிமிராமல், குறுகிய தோள்கள் புடைக் காமல், தரையையும் தன்னையும் பார்த்தபடி குடிசைக்குள் போனார். வெளியே கிடந்த பாறைக் கல்லில் உட்கார்ந்து கொண்டார். அங்கிருந்து பார்த்த அவர் கண்களுக்கு, பாறை மேல் சரிந்துகிடந்த வள்ளி, பாறையைப் பிளந்த ஆலமர வேர்போல தோன்றியது. அடிக்கடி கண்களைத் துடைத்துக் கொண்டார். வள்ளி என்று அழைக்கப்பட்ட, அந்தப் பிணத்தைப் பார்த்த அவர் கண்கள், குளமாகிக் கொண்டே வந்தன. பு.-3