பக்கம்:புதிய திரிபுரங்கள்.pdf/41

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புதிய திரிபுரங்கள் 35 சொல்லாதீங்க...வேற அதிகாரிகிட்ட இப்படிச் சொன் aங்கன்னா, ஒங்களை சாமியார் வேடத்தில் இருக்கிற நக்ஸலைட்டுன்னு சந்தேகப்படுவாங்க...' சாமியார், ஏகத்தாளமாகச் சொன்னார்: " அப்படிப் பார்த்தால், ஒரு கையில் உடுக்கையும் இன்னொரு கையில் திரிசூலமும் ஏந்தி, சுடலைப்பொடி பூசி, ஊழிநடனம் ஆடுற ஈஸ்வரனும் ஒரு நச்ஸலைட்டுத் தான்...ஒங்களுக்கு ஏதாவது சந்தேகம் வந்தால், நான் கோர்ட்டுக்கு வேணுமுன்னாலும் வாரேன். குறுக்கு விசாரணைக்கு உடன்படுறேன்...' 'கோர்ட்டு கோவில் இல்ல சாமி...' 'தெரியும்... செங்கோலுக்கு முன்னால் சங்கீதம் செல்லாதுன்னு தெரியும். அதே சமயம் தெய்வ நீதிக்கு முன் செங்கோல் நீதி செல்லாதுன்னும் தெரியும். சரி போயிட்டு வாரீங்களா...ஆறு மணி நேரமா அதோ பிணம் ஒங்களுக்காகக் காத்துக் கிடக்கு...பிணம் போல வாழ்ந்தவளை மனித ஜீவி மாதிரியாவது அடக்கம் பண்ணுங்க...' போலீஸ் அதிகாரிகள், சாமியார்மீது சந்தேகப் பார்வையை வீசிக்கொண்டே எழுந்தார்கள. 5 ஐந்தாறு நாட்கள் சாமியார் குடிசைக்குள்ளேயே முடங்கிக் கிடந்தார். வேல்சாமியின் விபத்தும்', வள்ளி யின் மரணமும் தொழிலாளர்களிடையே கொதிப்பை ஏற்படுத்தியிருப்பதை அவர்கள் போடும் கோஷங்கள், தூரத்து இடிமுழக்கமாய் கேட்டது. சாமியார் குற்றவுணர்வில் தவித்தார். வேல்சாமியை தடுத்திருக்கலாம்...அவனுக்கும் விபத்து வந்திருக்காது,