பக்கம்:புதிய திரிபுரங்கள்.pdf/42

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36. சு. சமுத்திரம் வள்ளிக்கும் மரணம் வந்திருக்காது... நான் இரட்டைக் கொலை செய்துவிட்டேனோ... ஈஸ்வரா... ஈஸ்வரா... சர்வேஸ்வரா... கிராமத்துப் பையன், வள்ளி இறந்த மறுநாளும் பால் கொண்டு வந்தான் சாமியார், அவனைப் பார்த்து 'நான் ஈஸ்வரனுக்கு எதிராய் சத்தியாக்கிரகம் செய்யறேன். பூஜை செய்யறதாய் உத்தேசமில்லை. நீ இனிமேல் வரவேண்டாம்' என்று சொல்லிவிட்டார். பெரிய விஷயங்களை உள்வாங்க முடியாத அந்த சின்னப் பையன் சாமியாரை, இனிமேல் பார்க்க முடியாதோ என்ற ஆதங்கத்தோடு போய்விட்டான். சாமியாரால் குடிசைக்குள் முடங்கிக் கிடக்க முடிய வில்லை. குருநாதரின் காவியாடை அவரை உறுத்தியது. தூங்கும்போது, லிங்கத்திற்குப் பூஜை செய்வது போல் கனவுகள வந்தன. கனவில் இருந்து வெளிப்படவும், ஈஸ்வரன் அனாதையாக நிற்பது போலவும், அவனை தானே கவனிக்க வேண்டும் என்பது போலவும் ஒரு பச்சாதாபம் ஏற்பட்டது. ஒருநாள் நடுநிசியில், ஒரு மானின் கூப்பாட்டில், அவர் திடுக்கிட்டு இருந்தார். மானின் மரணக் குரல். அது சன்னஞ் சன்னமாக அடங்கி, சதை சிதைந்த வேகத்தில் அதுவும் அடங்கியது. சாமியார் யோசித்துப் பார்த்தார். 'இதோ இந்தக் காட்டில், ஒரு மானை, ஓநாய்களோ அல்லது சிறுத்தையோ கொன்று புசித்திருக்க வேண்டும். ஏதுமறியாத இந்த மானை, ஒரு துஷ்ட மிருகம் கொல்ல வேண்டும்! துஷ்ட மிருகத்திறகு கோர நகத்தையும், அதனிடையிலிருந்து தப்பிப்பதற்காக, மானுக்குப் பாய்ச் சலையும் கொடுத்தவன் யார்? தப்புவதற்கு பின் கதவைத் திறந்தும், தாக்குவதற்கு முன்கதவையும் திறந்துவிட்டவன்