பக்கம்:புதிய திரிபுரங்கள்.pdf/44

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38. சு. சமுத்திரம் மேலும் ஒரு மாதம் சலனங்களிலிருந்து விடுபட்டுக் கழிந்தது. ஆனால் அன்றோ பெளர்ணமி இரவு மணி எட்டு இருக்கும். எங்கும் காட்டமைதி, கோவிலுக்கு வந்து, பூஜையைத் துவக்கப் போனார் சாமியார் அப்போது தொலைவில் இருட்டுருவ மாய் தோன்றிய ஒரு கிழிசல் உருவம், கோவிலுக்கு முன்னால், அறுபது வயது மூதாட்டியாகி தன் தலையிலும் அடித்துக் கொண்டது ஆடிய மேனி, வாடிய கண்கள் லிங்கத்தைப் பார்த்ததும், சொந்த தந்தையைப் பார்த்தது போல் அந்த மூதாட்டி, தலையில் பலங்கொண்டபடி அடித்துக்கொண்டு தூங்குமூஞ்சி மரத்தை ஆதரவாய்ப் பிடித்துக்கொண்டே அரற்றினாள். 'ஏய்யா...ஈசா...இருந்தது ஒரே மகன். லாரியில் மாட்டி ஒரேயடியாப் போயிட்டான். ஒன்கிட்டதான் வந்தேன் இப்போ அவனையும் கூட்டிக்கிட்டுப் போயிட் டியே... நான் என்ன பண்ணுவேன்? எங்கே போவேன்? இந்தத் தள்ளாத கிழவி என்னடா பண்ணுவேன்? ஒன்னை நம்புனவளை இப்படியாடா பண்ணுறதுசண்டாளா?' ' சாமியார், சாத்துவதற்காகத் தூக்கிய பூமாலையை மடியில போட்டுவிட்டு, அந்தக் கிழவியைப் பார்த்தார். அடிக்கடி இந்தப் பக்கம் வருகிறவள், பார்த்த ஞாபகம் இருக்கிறது. மகன் போனதால், இவளுக்கு போகுமிடம் தெரியாமல் போய்விட்டதோ? ஈஸ்வரா...ஈஸ்வரா...இது தப்புடா?’ பூஜை சமயத்தில் யாரிடமும் பேசாத சாமியார் இப்போது அந்த முதியவளிடம் பேச்சைத் துவக்கினார்: 'ஒனக்கு இவன்தான் ஒரே பையனா'