பக்கம்:புதிய திரிபுரங்கள்.pdf/45

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புதிய திரிபுரங்கள் 39 "ஆமாங்க சாமி. திக்குல்லாத அனாதையாயிட்டேன். எங்கே போறது, என்ன செய்யறதுன்னே தெரியலே...' 'சர்க்கார்ல வேலை பார்த்தானா?' ' "இவன் சர்க்கார் ஆளுல்ல சாமி... காண்டிராக்டர் கிட்ட வேலை பார்த்தவன்.'" 'காண்டிராக்டர் நஷ்ட ஈடு கொடுக்கமாட்டாரா?’’ 'நல்லா கொடுத்தான். ஒன் பையன் அந்திமச் செலவுக்குக் காசு கொடுன்னு கேக்கான். ' சாமியார், அந்த மூதாட்டியையே பார்த்தபோது அவள் அவரையே ஈஸ்வரனாக நினைத்து ஒப்பித்தாள். 'என் மகன் சிதறிக்கிடந்த ஏழை பாழைகளை ஒன்று சேர்க்கதுக்கு சங்கம் அமைச்சான். இதைப் பொறுக்காத காண்டிராக்டரு அவன்மேல லாரியை ஏத்தி கொன்னுட் டான்... எனக்கு மருந்து வாங்கப்போன மகன், மாயமாய் போயிட்டான். அவன் போன ஏக்கத்துல, அவனையே நம்பியிருந்த ஒருத்தியும் தூக்குப்போட்டு இங்கேதான் செத்தாள் ஒங்களுக்குக்கூட. த் தெரிஞ்சிருக்கும். அவளைக் கூடச் சாகடிச்சிருப்பாங்களோன்னு ஒரு சந்தேகம். ஏழை மேல சந்தேகம் வந்தால் எது வேணுமுன்னாலும் நடக்கும். ஏழை சந்தேகப்பட்டு என்ன சாமி நடக்கும்? வயிறுன்னு ஒண்ணு இருக்கு... நானும் என் சந்தேகத்தை வெளில காட்டிக்காமல் எனக்கு ஒரு வழி பண்ணுப் பான்னு கேட்டேன். 'இன்னொரு பையன் இருந்தால் கூட்டிக்கிட்டு வா வேலை கொடுக்கேன். இல்லன்னா நீ கல்ல உடை'ன்னு சொன்னான். இன்னைக்குக் கல்லுடைச்சேன். ஆனா கோடு போட்ட இடத்துல உடைக்காமல் குறுக்கா உடைச்சேன். காண்டிராக்டர் வந்து கல்லக் கெடுத் திட்டியேடி பாவி. திரும்பிப் பாராமல் ஒடலன்னா