பக்கம்:புதிய திரிபுரங்கள்.pdf/46

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40 சு. சமுத்திரம் கழுத்தப் பிடிச்சுத் தள்ளுவேன்’னு சொல்லிட்டான் சாமி. அவன் கை நகம் பட்டு... இந்தா பாரு சாமி கழுத்துல கீறல். ' சாமியார், அருவியோசை அடங்கும்படி அதிரொலி யுடன் கேட்டார்: 'அம்மா... நீ வேல்சாமியோட தாயா?" அந்த மூதாட்டி ஆச்சரியத்தோடு அவரைப் பார்த் தாள். பிறகு 'ஒங்களுக்கு அவனைத் தெரியுமா சாமி! என் தங்க மகனை... என் செல்ல மகனைத் தெரியுமா சாமி அவனைப் பெற்ற பாவி நான்தான். எனக்காக இருக்காட்டாலும் அவனையே நம்புன பொண்ணுக்காக வாவது ஈஸ்வரன் அவனை விட்டு வச்சிருக்கலாம். இப்போ முடியக்கூடாத எல்லாம் முடிஞ்சிட்டு... முடிய வேண்டிய நான்தான் முடியாம நிக்கேன். இதோ! இந்தக் கழுத்துல காண்டிராக்டர் நகம் பட்ட கீறலை மட்டும் என் செல்ல மகன் பார்த்திருந்தால் எப்படித் துடிச் சிருப்பான் தெரியுமா? இனிமேல் சொல்லி என்ன செய்ய?' அந்த மூதாட்டி அழுவதற்குத் திராணியற்றவளாய், விக்கித்து நின்றாள். பிறகு 'இதோ இந்தப் பையில இருக்கிற அவனோ. வேட்டியையும், சட்டையையுந் தான் எடுத்து எடுத்துப் பார்த்துக்கறேன்' என்று முனகி னாள் . சாமியார் ஒளிப்பிழம்பானார். "ஈஸ்வரா ... ஈஸ்வரா... இந்தத் தாய் சொல்றது ஒனக்குக் கேட்டுதா? கேட்டுதா? நீ விஷத்தக் கண்டத்துல தேச்கி வச்சிருக்கே இவளுக்கும் அதே இடத்துல நகக் கீறல் நீ தாங்குவது மாதிரி இவளால் முடியுமா? பாருடா மானுட விஷத்தை "' சாமியார் சததம் போட்டுக் கூவிவிட்டு, தன்னை உருக வைக்கும் வள்ளலார் பாடிய,