பக்கம்:புதிய திரிபுரங்கள்.pdf/52

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

46. சு. சமுத்திரம் போவது போலிருந்தது. லோகமாதா, அதோ போய்க் கொண்டிருக்கிறாள். சப்த லோகங்களைப் பிரசவித்தவள் தனியாகப் போகிறாள். சாமியார் ஆவேசப்பட்டவராய் வெளியே வந்தார். கோவில் முனையில் ஸ்தாபனம் செய்யப்பட்டிருந்த நட ராஜர் சிலையையே விழியாடாமல் பார்த்தார். நடனம் வேகமாக நடைபெறுவதைக் காட்டும் கலைந்த சடை. மார்பிலே பாம்பாரம், ஒரு கையில் உடுக்கை, இன்னொரு கையில் அக்கினிக் குண்டம் வலதுகால் தூக்கி நிற்கிறது. இடதுகால் கொடுமையின் அவதாரமான முயலவன்மீது அழுந்தியிருக்கிறது. அந்த நாதாந்த, போதாந்த, யோகாந்த, வேதாந்த சிலையையே உற்றுப் பார்க்கிறார். கண் கொண்ட குருடர்க்கு வழிகாட்டும் அந்தச் சிலையின் பின்னால் வள்ளலார் வந்து, 'நடராஜர் தன்னடம் கன்னடமே நடம் புரிகின்றதும் என்னிடமே” என்று பாடுகிறார். அந்தப் பாட்டு, அவர் காதில் ஒலித்துக் கொண்டி ருக்கும் அந்தச் சமயத்தில், கண்களுக்கு நடராஜர் சிலை, சிறிது சிறிதாக மாறுவதுபோல் தெரிகிறது. சூரிய சந்திரர் ஆழிகளாக, பதினான்கு உலகங்களும் தேர்த்தட்டுக்களாக, எண் திசை மலைகள் தூண்களாக, இமயமலை கொடி யாக, வேதங்கள் பரிகளாக, பிரம்மா சாரதியாக, மகாமேரு வில்லாக, மகாவிஷ்ணு அம்பாக, திரிபுரம் எரிக்கத் தெய்வத் தேரில் புறப்படும் விரிசடைக் கடவுளின் தோற்றம் தெரிகிறது. அது தெரியத் தெரிய செயற்பாடே பக்தி என்று ஏதோ ஒன்று சொல்கிறது. அண்ட சராசரங் கள் சுழல்வதும், எதுவுமே இருந்த இடத்தில் இல்லாமல் நகர்வதும் புரிகிறது. தீமையை எதிர்த்து செயல்படுவதே ஈஸ்வர சேவை என்று ஏதோ ஒன்று உணர்த்துகிறது.