பக்கம்:புதிய திரிபுரங்கள்.pdf/53

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புதிய திரிபுரங்கள் 47 ஏழை எளியவர்களை வாட்டி வதைக்கும் புதிய முயலவன் களை எதிர்த்து அடக்குவதே ஈஸ்வர நடனத்தின் தாத்பரியம் என்று உள்ளுக்குள் ஒன்று-பெரிதான ஒன்று கூவுகிறது. சரியை, கிரியை, யோகம், ஞானம் ஆகிய நான்கு வழிமுறைகளைவிட எளியவர்களும் வாழ்வாங்கு வாழ, வழி காட்டுவதே ஈஸ்வர வழி என்று ஏதோ ஒன்று அவரை வழிப்படுத்துகிறது. சாமியார் பிரபஞ்ச இயக்கத்தின் ஆதார சக்தியைப் பிரதிபலிக்கும் அந்த நடராஜர் சிலையையே பார்ப்பதை இன்னும் விடவில்லை. பார்க்கப் பார்க்க புதிய பார்வை உண்டாகிறது. இந்த சமூக அமைப்பில் ஏழை எளியவர் களுக்கு இடமில்லை. சூப்பப்பட்ட பணம் பழமாய் அவர்கள் வீசி எறியப்படுகிறார்கள். கண் முன்னாலேயே, அதுவும் கோவில் முன்னாலேயே, திக்கின்றித் திணறும் எத்தனையோ எளியவர்களைப் பார்த்தாகிவிட்டது. இனுைம் பார்த்துக்கொண்டே இருப்பது, ஈஸ்வர நிந்தைக்குச் சமமாகும். ஏதாவது என்னளவில் செய்ய வேண்டும். இந்த முதியவளைப்போல் எத்தனைபேர், கண்ணில் கண்டுபிடிக்க முடியாத குக்கிராமங்களில் இருக்கிறார்களோ...இவர்களுக்காகப் பெரிய அளவில் செய்யமுடியாமல் போனாலும், இங்கே காண்டிராக்டர் களிடமும், வெடிப் பாறைகளிடமும் மாட்டிக்கொண்டு, சிதறிக்கிடக்கும் ஏழை எளியவர்களை ஒன்று சேர்த்து, மானுடத்தின் மேன்மைக்காகப் பாடுபடலாம். பாடுபட வேண்டும். அக்கிரமக்காரர்களை, பாடுபடுத்த வேண்டும். அப்போதுதான், ஞான-முக்தி பெற்றவர்போல், சாமியார் தொலைவில் மறையப்போகும் முதியவளைப் பார்த்து 'அம்மா... தாயே... தயவு காட்டி இங்கே வாம்மா' என்று உரக்கக் கூப்பிடுகிறார். அவள் நின்று, நிதானித்து திரும்பி வருகிறாள். அவள் வருவது நிச்சயப்