பக்கம்:புதிய திரிபுரங்கள்.pdf/54

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48 சு. சமுத்திரம் பட்டதும் சாமியார், நடராஜர் சிலையை கைகூப்பி தொழுதபடி நிற்கிறார். இதற்குள் முதியவளும் அவர் அருகில் வந்து நிற்கிறாள். சாமியார், அநத எளிய வர்க்கத்தின் பிரதிநிதியையும் பாமர வர்க்க நாதனாய் நிற்கும் நடராஜர் சிலையையும் மாறி மாறிப் பார்க் இறார். பிறகு திடீரென்று தன் காவி வேட்டியைக் களைந்து உள்ளே போய் சதுரக்கல்லில் போட்டுவிட்டு, வெளியே வந்து லங்கோட்டுடன் நிற்கிறார். அவருக்குப் பைத்தியம் பிடித்துவிட்டதோ என்பதுபோல பயந்து ஒடுங்கிய முதியவளைப் ப ார் த் து அமைதியாகக் கேட்கிறார். 'பையில்...ஒன் மகனோட வேட்டி சட்டை இருக்கு துன்னு சொன்னல்லா?' ‘'எதுக்கு சாமி?’’ 'நான் இன்று முதல் ஒன் மகன். இந்த நடராஜன் என் அப்பன். நீதான் என் ஆதிபராசக்தி ... வேட்டி சட்டையை எடு...உ.ம்...சீக்கிரம்...' முதியவள் ஒன்றும் புரியாமல் மகனின் வேட்டியை யும், சட்டையையும் எடுத்து நீட்டுகிறாள். முன்பு தன் குருநாதரிடம் காவியாடையை எப்படி பயபக்தியோடு வாங்கினாரோ, அப்படி அந்த ஆடையை பயபக்தியோடு வாங்கிக் கொண்டே நடராஜரையே பார்க்கிறார். அவரையே சாட்சியாக வைத்துக் கொண்டதுபோல், அசுர வேகத்தில் தப்பு, ஆடலரசன் வேகத்தில் அந்த ஆடைகளை அணிந்துகொள்கிறார். பிறகு 'உம்... நடம்மா...ஒன் மகனை காண்டிராக்டர்கிட்ட சொல்லி, வேலையில சேரு...ஒன் இறந்த மகன் நினைத்ததை இந்த மகன் செய்து முடிப்பான். உம், நடப்போமா தாயே...!"