பக்கம்:புதிய திரிபுரங்கள்.pdf/62

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

56 க. சமுத்திரம் எல்லோரும் அசந்துவிட்டார்கள். எல்லாம் வளப்புல இருக்குவே" என்று சொன்ன அதே கிழவர், மேரி புஷ்பத்தை வேறு விதமாக வெறித்துப் பார்த்தார். இன்னும் படியிலேயே நின்ற ராசம்மா மேரிபுஷ்பத்தை நோட்டம் விட்டுக்கொண்டே ஏய்1.குமார்..."நீராருங் கடலுடுத்த பாடிக் காட்டுடா... இவனுக்குக் கெட்ட வார்த்தை சொல்லிக் கொடுத்தாலும் வராது' என்றாள், அவற்றைச் சொல்லிக் கொடுத்துத் தோற்றவள்போல. மேரி புஷ்பமும் போரில் தோற்ற ராவணன் ஜானகி நகுவாள்' என்று வருத்தப்பட்டதுபோல், பிரமுகர்களைப் பற்றிக் கவலைப்படாமல் ராசம்மா பாடுவாள்' என்று நாணினாள். இருந்தாலும், தேக்குத் துரண் அருகே, ஒரு நீளமான குச்சியில், அதைவிட சின்னக் குச்சியை குறுக்காக வைத்து, மத்தியில் ஒரு நூலை வைத்துக் கட்டிக்கொண் டிருந்த ஏழுவயது மகன் ஜெய்மிெயைப் பெருமையாகப் பார்த்துக்கொண்டே 'ஜாய்ஸ்லின் சில சமயம் இப்படித் தான் லூசாயிடுவான்...ஆனால் அவள் அப்படி இல்ல... ரொம்ப ரிலிஜியஸ். இப்பக்கூட சிலுவை செய்யுறத பாருங்க...' என்றாள். எல்லோரும் ஜெய்ஸியைப் பார்த்தபோது, அந்தச் சிறுமியோ "இது ஒண்ணும் சிலுவை இல்ல ஏரோப்பிளேன்' என்றாள் வெடுக் கென்று. சுவரில் மாட்டியிருந்த ரிவெக்ஸ் கடிகாரம் பன்னி ரெண்டு தடவை அடித்தது. உடனே கர்ணம் 'சரி, மணியடிக்குது. நல்ல நேரம் பேச்ச ஆரம்பிப்போமா?’’ என்றார். 'ஏன்வே பட்டையில போட்ட நண்டு மாதுரி பறக்கியரு...?' என்றார் முன்வnப். 'இது நீரு பிரிச்ச வரியை கஜானாவுல கட்டாதது மாதிரி நிதானமாக நடக்கிற விவகாரம் இல்ல. இப்பவே