பக்கம்:புதிய திரிபுரங்கள்.pdf/63

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கேள்வித் தீ 57 முடியப் போறது...என்ன சின்னையா... நான் சொல் லுறது...' என்றார் கர்ணம். முன்வnப்பிற்கு சின்னையாவான கந்தசாமிக் கிழவர் 'இதுல என்னப்பா சொல்றதுக்கு இருக்கு ராமன், லட்சுமணன் மாதிரி இருக்கிறவங்க...சும்மா...நாம பேச வேண்டியது உலக முறைக்கித்தான். சரி. சத்திரப் பட்டை பாசனத்துல எவ்வளவு இருக்கு...? நாலரைக் கோட்டை விதப்பாடா?' என்றார். கர்ணம் இடைமறித்தார். 'நாலரைக் கோட்டையும் ஒருவர்பேர்ல இல்ல. சர்க்கார்ல இந்தக் கூறுகெட்ட குப்பங்க நிலச் சீர்திருத்தமுன்னு கொண்டுவரும்போது இவங்கய்யா என் காத கடிச்சாரு. இப்போ, பலர் பேர்ல பட்டா இருக்கு. ’’ முன் mப் பதிலளித்தார். 'என்னவே, ஜமாபந்தில உளறுறது மாதிரியே உளறுறியரு? பட்டாவா இப்ப முக்கியம்? அகத்தான் எப்படி வேணும்னாலும் பண்ணிக் கலாமே. மொதல்ல நிலத்தப் பிரிச்சிப் பாப்போம்...' கந்தசாமிக் கிழவர் தலையிட்டார். சரி. ஒங்க சண்டய கச்சேரில வச்சுக்கங்க. எப்பா, ராஜலிங்கம்! தங்கப்பாண்டி! சத்திரப்பட்டை குளத்துல நாலரைக் கோட்டையும், சீமப்பேரில இருக்கிற மூணு கோட்டை யும், சரியா இருக்கும் ஏன்னா மேப்பேரிலே...எல்லாப் பயிரும் போடலாம் பாரு...யார் யாரு, எத எத எடுத்து க் கிடுறிய? சீக்கிரமாச் சொல்லுங்க, நாழியாவுது...' ராஜலிங்கம் குழைந்தார்...'அண்ணன் எத வேணு முன்னாலும் எடுக்கட்டும். அவன் எடுத்ததுபோக மிச்சம் இருந்தால் தரட்டும்...'