பக்கம்:புதிய திரிபுரங்கள்.pdf/64

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

58. சு. சமுத்திரம் தங்கப்பாண்டி, தம்பியை பாசத்தோடு பார்த்துச் சொன்னார். அதெப்படிடா... நீ வெளியூர் ல இருக்கவன் நானாவது இங்க இருந்து எல்லாத்தையும் கவனிக்கிறவன். அதனால ஒனக்குப் பிடிச்சத எடுததுக்கிட்டு பிடிக்காதத தா. வாங்கிக்கிறேன்...' 'எங்க இருந்தாலும் நீதான் என் வயலையும் கவனிக் கப்போற ஒன் இஷ்டம் எத வேணுமுன்னாலும் தாங்க 'சரி மாமா... தம்பிக்கு சீமப்பேரி பாசன த்தை கொடுத்திடுங்க. சத்திரப்பட்டையில சில சமயம் கமலை' அடிக்கணும். அது இவனுக்கு தோதுப்படாது.' முன்வnப், கையாட்டிக்கொண்டே பேசினார் "அப்டி பங்கு வைக்கது தப்பு. ஒவ்வொரு பாசனத்தையும் செண்டு ரெண்டா போடணும்... அப்பத்தான் ஒருவன் வயல இன்னொருவன் பார்த்துக்கலாம்.' கர்ணம் விடுவாரா? அதுவும் முன்வnப் பேசும்போது. "வே...பேசத் தெரிஞ்சா பேசும்...இல்லன்னா சும்மாக் கெடயும். போனவாரம் இப்படித்தான தாசில்தார்கிட்ட எடக்குமடக்கா பேசி மாட்டிக்கிட்டியரு...ஒரு பாசனத்த ரெண்டா பிரிச்சா...பம்பு ஸெட்ட எப்படிவே பிரிப்பியரு? டிராக்டர எப்படிவே பிரிப்பியரு? பிரிவினன்னு வந்த பிறவு, அவன் பாப்பான் இவன் பாப்பான்னு சொல்லுததுல அர்த்தம் இருக்காவே? படுகளத்துல ஒப்பாரிவச்சு என்னவே அர்த்தம்...' கந்தசாமிக் கிழவர், அவர்களை கையமர்த்திவிட் டுப் பேசினார். "சரிப்பா. சத்திரப்பட்ட பாசனம் மூத்த வனுக்கு சீவலப்பேரி இளையவனுக்கு! அப்புறம் கடையப பாசனத்துல இருக்கிற மூணு கோட்ட விதப்பாட்ட எப்படிப் பிரிக்கிறது...?’’