பக்கம்:புதிய திரிபுரங்கள்.pdf/66

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

60. சு. சமுத்திரம் மல் சொன்னது. இதற்குள் தலைமை ஆசிரியர் தங்கசாமி வெளியே இருந்து ஒரு 'சிவப்பு வெற்றிலைக் கட்டுடன் உள்ளே வந்தார். பிரமுகர்கள், காபியை குடித்துக்கொண்டே, பிரிவினையை ஏ ற க் கு ைற ய தீர்த்துவிட்டார்கள். அண்ணன் தம்பி இருவரும், யார் கர்ணன் என்பதை தெளிவாக்குவதற்காக விடு' என்று சொல்லுமுன் னாலேயே விட்டுக் கொடுத்ததால், சில பிரமுகர்களுக்குக் குறிப்பாக கந்தசாமிக் கிழவருக்கு, ஏன் வந்தோம் என்பது போலிருந்தது. மாந்தோப்பு பெரியவருக்கும், தென்னந் தோப்பு சின்னவருக்கும் கொடுக்கப்பட்டன. டிராக்டர், பெரியவர்க்கு...அதற்குப் பிரதியாக திருநெல்வேலியில் ஒடும் 'டாக்ஸி சின்னவருக்கு...ஊருக்குச் சற்று ஒதுங்கிய இடத்தில் வந்த விலைக்கு வாங்கிப் போட்டிருந்த ஒரு சின்ன வீடே தனக்குப் போதும் என்று சொல்லிவிட்டார் சின்னவர். நீ அதிகாரியாய் இருக்கறவன். நாலுபேர கூட்டிக்கிட்டு வாரவன். ஒனக்கு இந்த வீடுதாண்டா லாயக்கு. நான் வாத்தியார், எதுல வேணுமுன்னாலும் இருந்துக்குவேன்!' என்று மூத்தவர் சொன்னபோது, இளையவர், தன் மனைவியை தெரியாத்தனமாக எதிர்த்துப் பேசிவிட்டவர்போல் பதை பதைத்து, 'இல்ல அண்ணாச்சி... நான் எப்பவாவது எட்டிப் பாத்துட்டு வந்த வேகத்துலேயே ஒடிப் போறவன்...நீ பிள்ள குட்டிக் காரன். ஒனக்குத்தான் இந்த வீடு...' என்று ஒரேயடி யாகச் சொல்லிவிட்டார். கர்ணத்தால் மேலும் பேசாமல் இருக்க முடியவில்லை. ‘'எதுக்கும் ஒரு செட்டில்மென்ட் பத்திரம் போட் டுடுவோம். அப்படியே திருஷ்டி சுத்திப் போடுங்க. இந்த மாதுரி சுமுகமா, எந்த வீட்லயும் பாகம் பிரிச்சது கிடையாது' என்றார்.