பக்கம்:புதிய திரிபுரங்கள்.pdf/67

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கேள்வித் தீ 61 மேரி புஷ்பம், படிதாண்டி வெளியே வந்து, கந்த சாமிக் கிழவரைப் பார்த்துக் கேட்டாள். 'அப்புறம், ஸ்கூல் யாருக்குன்னு பேசிட்டியளா... இனிமேல்தான் பேசனுமா...?’’ கர்ணம் எழுதப் போவதை உற்றுப் பார்த்துக்கொண் டிருந்த தங்கப்பாண்டி திடுக்கிட்டார். கண்டுக்காதது மாதிரி 'உம்...சீக்கிரமா எழுதும்...' என்று சொல்லி விட்டு ஒரக்கண்ணால் தம்பியின் மனைவியைப் பார்த் தார். அவள் மீண்டும் கேட்டாள்: ஸ்கூல் எங்களுக்குத் தானே?’’ தங்கப்பாண்டி, கர்ணத்தோடு சேர்ந்து தலை நிமிர்ந் தார். தம்பி, 'அமுக்கடி கள்ளன்’ மாதிரி மேலே ஒடிய மின்விசிறியைப் பார்த்தபோது, அவர் கந்தசாமிக் கிழவரைப் பார்த்துக் கண்களால் கெஞ்சினார். கிழவரும் தன் தங்கச்சி மகன்’ விஷயத்தை நினைத்துக் கொண்டும், ரெண்டுபடப் போகும் வீட்டில் தனக்கு தொக்கு" கிடைத்த திருப்தியிலும் அமைதியாகப் பேசினார். "இருபது இருபத்திரண்டு வருஷமா, அவன்தான் ஸ்கூல கட்டி அழுவுறான்...வச்சிட்டுப் போறான்...' மேiபுஷ்பம் அனாவசியமாகப் பதிலளித்தாள்: 'அதனாலதான் கேக்கோம்... அவரு இருபத்திரண்டு வருஷமா அனுபவிச்சுட்டாரு...நாங்களும் கொஞ்ச காலத் துக்கு வச்சிட்டுப் போறோம்!' கந்தசாமிக் கிழவர் அதட்டினார். 'நீ சும்மா இரு அம்மாளு. பள்ளிக்கூடம்-பொல்லாத பள்ளிககூடம்... இன்னைக்கோ நாளைக்கோன்னு சுவருவ நிக்குது. இருக் கதுல்லாம் ஒட்டப் பெஞ்சு...கட்டடம் ரெண்டாயிரம் ரூபாய்க்குப் பொறாது. இது வந்துதானா ஒனக்கு நிறையப் போவுது? கணக்கப்பிள்ள...நீ ஏய்யா எழுதாம முழிக்கே...எழுது. ஸ்கூலு தங்கப்பாண்டிக்குன்னு ஒரு வரி எழுதிடு...'