பக்கம்:புதிய திரிபுரங்கள்.pdf/70

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

64 சு. சமுத்திரம் 'காலேரைக்கால் துட்டுக்கு நாலேரைக்கா வாழைக்காய், நாலேரைக்கா துட்டுக்கு எத்தன வாழைக்கான்னு இப்ப தான் கேக்கறதுமாதிரி இருக்கு மாகாணி வாய்ப்பாட்டச் சொல்லலன்னு என் முதுகில அடிச்சத நினைச்சா இப்பகூட வலிக்குது. தழும்புகூட இன்னும் மறையல... வீடு வீடா போயி, நாயி மாதுரி காத்துக் கிடந்து, பிள்ளியளக் கொண்டு வந்து ஆரம்பிச்ச பள்ளிக்கூடண்டா இது... இப்ப காட்டாப்பு வரைக்கும் வந்து, இன்னும் பத்தாப்பு வரைக்கும் வரவேண்டிய பள்ளிக்கூடண்டா இது...வெண்ண திரளும்போது தாழிய உடை ச்சிடாதி யடா. இந்தப் பள்ளிக்கூடம் வந்த பிறவுதான், இந்த வீட்ட கட்டுனாரு. இது வந்த பிறவுதான் சத்திரப் பட்டையில நாலரைக் கோட்ட நிலமும் கடயத்துல மூணு கோட்ட நிலமும் வாங்க முடிஞ்சுது. அதுக்கு முன்னால, எங்க மாமன் வெறும் ஒட்டாண்டிதான். என் நிலமயில தான் இருந்தாரு அப்படி கட்டிக் காப்பாத்துன பள்ளிக் கூடத்த ஒண்னு கிடக்க ஒண்ணு பண்ணிப்பிடாதிங்கடா. இது கற்பகத்தருடா...ஒங்களுக்கு வீடுவாசலையும் பால் பவுடரையும் கொடுத்த காமதேனுப் பசுடா.' தங்கப்பாண்டி அவரை நீதிபதியாக நினைத்து வாதாடினார். 'இ ந் த ப் பள்ளிக்கூடத்த கட்டிக் காப்பாத்த என்ன பாடுபட்டேன்னு ஒமக்கே தெரியும். கவாலிப் பயலுவ என்ன கேள்வில்லாம் கேட்டாங்க... வாத்தியாருங்ககூட பதினைஞ்சு வருஷத்துக்கு முன்னால எப்டி செட்டு சேர்ந்தாங்க... 'வடக்கூர்ல வேதப் பள்ளிக்கூடம் போட்டியா வந்தபொறவு, பிள்ளிங்க எண்ணிக்கை குறைஞ்சுது... நான் நம்ம ஊர் ஆளுங்க காலுல கையில விழுந்து எப்படிச் சேர்த்தேன். நாயே பேயேன்னு பேசுன டி.இ.ஒ. கிட்ட கூடல்லாம் எப்டி எப்டி குழஞ்சேன்...இன்னையோடு அந்தப் பள்ளிக் கூடத்துல என் கால்பட்டு இருபத்தோறு வருஷம் ஆவுது தம்பி...அந்தக் காலை ஒதைக்கப் பார்க்கது நியாயமா?