பக்கம்:புதிய திரிபுரங்கள்.pdf/74

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

68. சு. சமுத்திரம் ச்ேசி.ஏலமா?' ' 'இதுல என்ன முன்சீப் தப்பு: குளத்துல இருக்கிற விறால் மீனை ஏலம் போடுறோம். கோயிலுல போட்ட பந்தல் 'கம்பு கணியள ஏலம் போடுறோம். மானத்த தவிர எத வேணுமுன்னாலும் ஏலம் போடலாம். சரி யப்பா கேளுங்க...' மணிமுத்து மார்பை நிமிர்த்திக் கொண்டார். 'ஐயாயிரம் ரூபாய்' என்றார் தங்கப்பாண்டியின் மாமனார். 'பத்தாயிரம்' என்றார் ராஜலிங்கம் மாமனார்.

  • பதினையாயிரம்.'

'இருபதாயிரம்!'" 'இருபத்தையாயிரம்' "இருபத்தையாயிரம் ஒரு தரம் இருபத்தையாயிரம் ரெண்டு தரம்! இருபத்தையாயிரம்...' 'இருபத்தெட்டு!' 'இருபத்தெட்டு!...ஒரு தரம் இருபத்தெட்டு!...தங்கப் பாண்டி கேக்கணுமுன்னா கேளு...அப்புறம் வருத்தப்படப் படாது...இருபத்தெட்டு...!" 'முப்பாதாயிரம்' 'முப்பதாயிரம்...ஒரு தரம் முப்பதாயிரம்...ராஜலிங் கம்...கேக்கனுமுன்னா கேளு! ஒரு தரம் முப்பதாயிரம். ரெண்டாந்தரம் முப்பதாயிரம்...' ராஜலிங்கம் மேற்கொண்டு கேட்கப் போனார். உடனே மேரி புஷ்பம், அவரது வாயை பகிரங்கமாகப் பொத்திக் கொண்டாள். குசேலர் அவலை, கிருஷ்ணன் தின்னும்போது, ருக்மணியோ லட்சுமியோ தலையிட்டது போல...